முசாபர்நகர் மாவட்டம்
முசாபர்நகர் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் தலைமையிடம் முசாபர்நகர் ஆகும். மாவட்ட நிர்வாகம்2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் முசாபர்நகர், புதானா, ஜன்சத் மற்றும் கதௌலி என நான்கு வருவாய் வட்டங்களும், 704 வருவாய் கிராமங்கள், 10 உள்ளாட்சி அமைப்புகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 21 காவல் நிலையங்கள் கொண்டுள்ளது. அரசியல்இந்த மாவட்டத்தில் கைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.[1] இந்த மாவட்டத்தின் பகுதிகள் முசாபர்நகர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.[1] மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முசாபர்நகர் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 41,43,512 ஆகும். அதில் ஆண்கள் 21,93,434; பெண்கள் 19,50,078 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 69.12% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,46,062 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 57.51 %, இசுலாமியர்கள் 41.30 %, சீக்கியர்கள் 0.45 %, கிறித்தவர்கள் 0.16 %, சமணர்கள் 0.39 %, மற்றவர்கள் 0.19% ஆகவுள்ளனர்.[2] இம்மாவட்டத்தில் இந்தி மொழி 87.02% மற்றும் உருது மொழி 12.58% மக்களால் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் பார்க்கவும்சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia