சரவணன் மீனாட்சி
சரவணன் மீனாட்சி என்பது 7 நவம்பர் 2011 முதல் 17 ஆகத்து 2018 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடர் எவர்கிரீன் புரோடக்சன்ஸ் சார்பில் சையத் அன்வர் அகமது என்பவர் தயாரிக்க முதல் பருவத்தை அழகர் என்பவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தை பிரவீன் பென்னட் என்பவரும் இயக்கியுள்ளனர். இந்த தொடரின் முதல் பருவத்தில் செந்தில் குமார் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[3] அதை தொடர்ந்து இரண்டாம் பருவத்தில் கவின், ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் மூன்றாம் பருவத்தில் ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் ரியோ ராஜ் ஆகியோரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. இது 2012 ஆம் ஆண்டு 'மயிலாப்பூர் அகாடமி விருது' விழாவில் சிறந்த தொடர், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை போன்ற பிரிவுகளில் விருதுகள் வென்றது. அத்துடன் 'விஜய் தொலைக்காட்சி விருது' விழாவிலும் சிறந்த ஜோடி, சிறந்த நடிகர் போன்ற பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் பருவங்கள்
பருவங்கள்பருவம் 1இந்த தொடரின் முதல் பருவம் 7 நவம்பர் 2011 முதல் 21 அக்டோபர் 2013 ஆம் ஆண்டு வரை இரவு 8:30 மணிக்கு 520 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[4] இந்த தொடரில் சரவணன் (செந்தில் குமார்) மற்றும் மீனாட்சி (ஸ்ரீஜா சந்திரன்) ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சரவணன் சென்னையைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்ப பின்னணியை கொண்ட வானொலி தொகுப்பாளர். மீனாட்சி திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு சிறிய நகரப் பெண், ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இருவருக்கும் திருமணம் செய்வதற்காக இரு வீட்டாரும் நினைக்கின்றனர் ஆனால் அவர்களின் திருமணம் தடை பெறுகின்றது. இருப்பினும் சரவணனும் மீனாட்சியும் பார்த்த முதல் நொடியே ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதற்க்கு பிறகு இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் எப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது என்பதே கதை. நடிகர்கள்
பருவம் 2இந்த தொடரின் இரண்டாம் பருவம் 21 அக்டோபர் 2013 முதல் 15 சூலை 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த தொடரின் கதை சரவணன் மற்றும் மீனாட்ச்சியின் மகன் சக்தி சரவணன் கனடாவில் இருந்து தனது குடும்ப உறுப்பினரை சந்திக்க வருகின்றார் அங்கு தனது தாய் மாமன் தமிழின் மகளான தங்க மீனாட்சியை பார்த்ததும் காதல் செய்கின்றான். நாட்கள் போக போக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதே தருணம் மீனாட்சியை காதலைக்கும் முறை பையன் சரவண பெருமாள் இந்த முக்கோண காதல் கதையில் சரத்ப சூழ்நிலையால் தங்கமீனாட்சி சரவண பெருமாளை திருமணம் செய்கிறாள். திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளுடன் எப்படி செல்கின்றது என்பது தான் கதை. நடிகர்கள்
பருவம் 3இந்த தொடரின் மூன்றாம் பருவம் 18 சூலை 2016 முதல் 17 ஆகத்து 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த தொடரின் கதை காதல், குடும்பம், பேய், பழிவாங்குதல், திகில் போன்ற பல கதை அம்சங்களை கொண்டுள்ளது.[5][6][7] நடிகர்கள்
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மறு ஆக்கம்இந்த தொடரின் முதல் பருவம் தெலுங்கு மொழியில் 'ராஜா ராணி' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் 'ஜஸ்ட் மாத் மாதல்லி' என்ற பெயரிலும், 2017 ஆம் ஆண்டு வங்காள மொழியில் 'ப்ரேமார் கஹினி' என்ற பெயரிலும் ஒளிபரப்பானது.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia