சல்மான் அலி ஆகா Salman Ali Agha தனிப்பட்ட தகவல்கள் பிறப்பு 23 நவம்பர் 1993 (1993-11-23 ) (அகவை 31) லாகூர் , பஞ்சாப் , பாக்கித்தான் உயரம் 6 அடி[ 1] மட்டையாட்ட நடை வலக்கை பந்துவீச்சு நடை வலக்கை எதிர்ச்சுழல் பங்கு பன்முக வீரர் பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி தேர்வு அறிமுகம் (தொப்பி 247 ) 16 சூலை 2022 எ. இலங்கை கடைசித் தேர்வு 24 சூலை 2023 எ. இலங்கை ஒநாப அறிமுகம் (தொப்பி 236 ) 16 ஆகத்து 2022 எ. நெதர்லாந்து கடைசி ஒநாப 11 நவம்பர் 2023 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி 2012/13 லாகூர் சலிமார் 2018–2021 லாகூர் கலண்டார்சு 2019–2023 தெற்கு பஞ்சாப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
சல்மான் அலி ஆகா (Salman Ali Agha , பிறப்பு: 23 நவம்பர் 1993)[ 2] ஒரு பாக்கித்தானிய பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் பாக்கித்தான் அணிக்காக 2022 சூலை முதல் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[ 3]
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
2021 சனவரியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் பாக்கித்தானின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[ 4] [ 5] 2021 மார்ச்சில், மீண்டும் சிம்பாப்வேக்கு எதிரான தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டார்.[ 6] [ 7] 2021 சூனில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பாக்கித்தானின் பன்னாட்டு ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[ 8] 2022 சூனில், இலங்கைக்கு எதிரான தேர்வுப் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டார்.[ 9] இத்தொடரிலேயே தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 10]
ஆகத்து 2022 இல், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.[ 11] இத்தொடரில் இவர் தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[ 12] 2022 திசம்பரில், தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[ 13]
மேற்கோள்கள்
↑ "Agha Salman" . Sportskeeda . Retrieved 27 July 2023 .
↑ "Salman Ali Agha Special Interview | Pakistan vs New Zealand | 4th ODI 2023 | PCB | M2B2A" . Sports Central . Retrieved 6 May 2023 – via YouTube.
↑ "Agha Salman" . ESPNcricinfo . Retrieved 1 November 2015 .
↑ "Shan Masood, Mohammad Abbas, Haris Sohail dropped from Pakistan Test squad" . ESPNcricinfo . Retrieved 15 January 2021 .
↑ "Nine uncapped players in 20-member side for South Africa Tests" . Pakistan Cricket Board . Retrieved 15 January 2021 .
↑ "Pakistan squads for South Africa and Zimbabwe announced" . Pakistan Cricket Board . Retrieved 12 March 2021 .
↑ "Sharjeel Khan returns to Pakistan T20I side for tour of South Africa and Zimbabwe" . ESPNcricinfo . Retrieved 12 March 2021 .
↑ "Mohammad Abbas, Naseem Shah return to Pakistan Test squad" . ESPNcricinfo . Retrieved 4 June 2021 .
↑ "Yasir Shah returns for Sri Lanka Tests" . Pakistan Cricket Board . Retrieved 22 June 2022 .
↑ "1st Test, Galle, July 16 - 20, 2022, Pakistan tour of Sri Lanka" . ESPNcricinfo . Retrieved 16 July 2022 .
↑ "Pakistan name squads for Netherlands ODIs and T20 Asia Cup" . Pakistan Cricket Board . Retrieved 3 August 2022 .
↑ "1st ODI, Rotterdam, August 16, 2022, Pakistan tour of Netherlands" . ESPNcricinfo . Retrieved 16 August 2022 .
↑ Ali, Mir Shabbar (28 December 2022). "Gritty Salman cracks maiden ton before New Zealand respond strongly" . DAWN.COM .
வெளி இணைப்புகள்