சாஞ்சோர்
சாஞ்சோர் (Sanchore), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள ஜலோர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 மார்ச் 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட சாஞ்சோர் மாவட்டத்தின்[2] நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது ஜெய்ப்பூருக்கு தென்மேற்கே 565 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் இராஜஸ்தான்-குஜராத் எல்லைப்புறத்தில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 23 வார்டுகளும், 5657 வீடுகளும் கொண்ட சாஞ்சோர் நகராட்சியின் மக்கள் தொகை 32,875 ஆகும். அதில் ஆண்கள் 17,115 மற்றும் பெண்கள் 15,760 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.52 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24.51 % மற்றும் 2.63 % ஆக உள்ளனர். இந்துக்கள் 86.25%, சமணர்கள் 6.45%, இசுலாமியர்கள் 7.15% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர். [3] போக்குவரத்துஇராஜஸ்தானின் ஜெய்சல்மேர் மற்றும் குஜராத்தின் மெக்சனா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 68 சாஞ்சோர் வழியாகச் செல்கிறது.[4] நீர் வளம்நர்மதை கால்வாய்[5]சாஞ்சோர் மாவட்டம் மற்றும் ஜலோர் மாவட்டத்தின் 124 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia