சாதி மல்லிகை
சாதி மல்லிகை அல்லது ஜாதி மல்லிகை அல்லது சந்தன மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum grandiflorum subsp. grandiflorum) தெற்காசியாவில் காணப்படும் மல்லி இனத்தின் துணையினமாகும். ஆசிய பெருமல்லி இனத்தின் கீழ் அமைந்துள்ள, துணை இனமாகும். ஸ்பானிஷ் ஜாஸ்மின், ராயல் ஜாஸ்மின், காடலோனியான் ஜாஸ்மின் என ஆங்கிலத்திலும், சமேலி என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது.[1] இந்தியாவில் இதன் இலைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், இதன் மலர்கள் பெண்களின் சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில், இது சால்ட் ரேஞ் மற்றும் ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள காடுகளில், கடல்மட்டத்திலிருந்து 500-1500 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. இது சில நேரங்களில், மல்லிகையின் (Jasminum officinale) ஒரு வகையாகவே கருதப்பட்டது.[2]யாசுமினம் கிராண்டிப்ளோரம் (Jasminum grandiflorum) என்ற இனத்தில் இரு சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் இந்த துணையினம் மட்டுமே பல கண்டங்களில் காணப்படுகிறது. மற்ற துணையினம்( Jasminum grandiflorum subsp. floribundum) அரபு நாடுகளிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும் மட்டுமே காணப்படுகிறது.[3] [4][5] வளரியல்புஇது படர்ந்து 2–4 மீட்டர் உயரம் வளரக்கூடிய இலையுதிர் புதர்ச் செடியாகும். இதன் இலைகள், எதிர் இலையடுக்கத்துடன், 5–12 செ.மீ. நீளத்துடன், காது (அல்லது இறகு) வடிவமுள்ள 5–11 குற்றிலைகளுடன் காணப்படும். இதன் மலர்கள், திறந்த நுனிவளராப்பூந்துணர்களாக, 13–25 மீ.மீ. நீளம் கொண்ட தண்டுடன் இருக்கும். மேலும் வெண்ணிறம் கொண்ட அல்லிவட்டத்துடன் (இதழ்கள்) 13–22 மீ.மீ. நீளமுள்ள ஐந்து இதழ்களுடன் பூக்கின்றன.[6][7] இவற்றின் மணம் தனித்தன்மையுடனும், இனிமையாகவும் இருக்கும். இது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது. கரைத்துப்பிரித்தல் (கரைப்பான் வழிச் சாறு இறக்கல்) முறைப்படி, இவற்றின் சாறு எடுக்கப்பட்டு, ஜாஸ்மின் கான்கிரீட்டுகளாகவும், ஜாஸ்மின் ஒலியோரேசின்களாகவும் மாற்றப்படுகின்றன. இவை இரண்டும் வாசனைத்திரவியத் தொழிலில் உபயோகப்படுகின்றன. பேரினச்சொல்லின் தோற்றம்அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [8] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [9] பயிர்ப் பாதுகாப்பு முறைகள்ஒருங்கிணைந்த சாதி மல்லிகை பயிர்ப் பாதுகாப்பு முறைகள்[10] கீழ்வருமாறு:
இவற்றையும் காணவும்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia