மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. மல்லிப்பேரினத்தின் இலைகள் இலையுதிர்/கூதிர் காலத்தில் உதிரும் இயல்புடையதாகவோ (deciduous), எப்பொழுதும் உதிராமல் பச்சை நிறத்தோடோ (evergreen) இருக்கும் வளரியல்புடன் கொண்டது. இதன் தண்டு நிமிர்ந்தோ, பரவலாக புதர் போன்றோ, படரும் கொடி போன்றோ வேறுபட்டு காணப்படும். இலைகளின் அமைப்பு எதிர் இலைகளாகவோ, எதிரெதிர் அமைப்போடு அமைந்திருக்கும். மேலும், இலைகள் எளியமையாகவோ, மூவிதல்களாகவோ (trifoliate), இலை நுனி குவிந்து ஊசி போலவோ(pinnate) காணப்படுகின்றன. இப்பேரினப் பூக்களின் விட்டம் ஏறத்தாழ 2.5 செ. மீ. இருக்கும். பெரும்பான்மையான பூக்கள் வெந்நிறமாக இருந்தாலும், வெந்நிறத்தோடு இளஞ்சிவப்பு நிறம் கலந்தும், சில பூக்கள் இளஞ்சிவப்பு கலந்தும், மஞ்சள் நிறமாகவும் காணப்படுகின்றன.
வெண்மை Jasminum sambac
மஞ்சள் Jasminum mesnyi
வெண்மை+இளஞ்சிவப்பு Jasminum polyanthum
பின்னால் இளஞ்சிவப்பு Jasminum nitidum
எதிர் இலையமைவு (opposite, pinnate)
மூவிதழ் இலையமைவு (trifoliate)
Jasminum auriculatum சித்தூர் மாவட்ட தலக்கோணாக் காட்டில் மல்லிகை முல்லையின் தண்டு அமைவு
Jasminum coarctatum மல்லிப் பழங்கள்
பயிரிடல்
வணிகத்திற்காக பூப்பண்ணைகளிலும், அழகுக்காவும் பணியிடங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. திருமண, மதச் சடங்குகளிலும், பெண்கள் தலையில் சூடிக் கொள்ளவும் பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இதனை குண்டு மல்லி எனவும், ஆந்திர மாநிலத்தில் குண்டு மல்லே எனவும் அழைக்கின்றனர். பிற நாடுகளில் இதனை அரபு மல்லி (Arabian jasmine) என்றும் அழைக்கின்றனர்.
சொற்பிறப்பியல்
அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [12] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெய்க்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரெஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரெஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [13]
இந்தியப் பெயர்கள்
இந்தியாவில் மல்லிகை மலரை, அதன் இன வகையைப் பொறுத்து, பல மொழிகளிலும், சில இடங்களில் ஒரு பெயராகவும், பிறவற்றில் வேறு பெயர்களிலுமாக பல பெயர்களில் வழங்குகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு:
சமிஸ்கிருத மொழியில் "மாலதி " அல்லது "மல்லிகா " என்பர். "மோத்தி " என்னும் சொல், (சமிஸ்கிருத மொழியில் "முக்தா " அல்லது "முக்தாமணி " அல்லது "மௌடிகா " எனப்படுகிறது. (முக்தா என்பதற்கு சுதந்திரமான, தளைகளற்ற என்னும் ஒரு பொருளும் உண்டு).
இந்தி மொழியில் "சமேலி ", "ஜூஹி ", அல்லது "மோத்தியா " என அழைக்கின்றனர். இம்மொழியில் "முத்து " எனப் பொருள்படும். இந்த மலர் வெண் நிறம் கொண்டு, வட்ட வடிவமாக, அழகு மிகுந்து பார்வையிலும் அழகிலும் முத்துக்களை ஒத்திருப்பதால் "மோத்தியா " என்னும் பெயர் பெற்றது.
மராத்தி மொழியில், "ஜாயீ ", "ஜூயீ ", "சாயாலீ ", "சமேலி " அல்லது "மொகாரா " என இதனை வழங்குகின்றனர்.
"மல்லி" என்பதன் பொருள் பருத்தது; உருண்டது; தடித்தது ஆகியனவாகும். இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படுவது, ஒரு வகை காட்டு மல்லிகை என்பர். இன்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் பல கிராமங்களில் முல்லை என்றே விற்கப்படுகிறது. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி, இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை, பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. மதுரை மல்லி புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[19]
கலாச்சாரப் பயன்பாடுகள்
பல்வேறு நாடுகளில் அன்றாட வாழ்விலும், கலாச்சாரத்திலும், சடங்குகளிலும் இம்மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் விவரம் வருமாறு;—
குறியீட்டியம்
12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாவோ சாங்க் என்னும் சீனக் கலைஞர் மசி, நிறங்கள் கொண்டு பட்டுத்துணியில் வரைந்த வெண்ணிற மல்லிகைக் கொடி
பல நாடுகளிலும், மாநிலங்களிலும் மல்லிப் பேரின மலர்கள் தேசிய சின்னமாகவும், திருமண நிகழ்வுகளிலும், நீத்தார் சடங்குகளிலும் முக்கிய குறியீட்டியமாகப்(symbolism) பின்பற்றப்படுகிறது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய பெண்கள் தங்கள் தலையிலும், இறைவனுக்கும் மல்லிச் சரங்களைச் சாத்துவர்.
ஹவாய்: இருள்நாறி ("pikake) என்ற மலரை 'லெய்'(lei (garland)) என்ற மாலையாகவும், பல நாட்டு பாடல்களுடனும் தொடர்புடையது. "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[21]
பாக்கித்தான்: மௌவல்(chambeli or yasmin) என்ற மலரானது தேசிய மலராகும். "சம்பேலி " அல்லது "யாஸ்மின் " என அழைப்பர் [23]
பிலிப்பீன்சு: 1935 இல் அறிமுகம் செய்யப்பட்ட இருள்நாறி என்ற மலர், இந்நாட்டின் தேசிய மலராகும். சமப்கியுட்டா ("sampaguita" ) என்றழைக்கப்படும் இத்தாவரம், மதச்சடங்கு மாலைகளில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. [24]
இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் (ரோஜா மற்றும் இதர மலர்களைப் போல பிரபலமாக) இல்லத்து பூசைகளிலும், (இல்லத்துப் பெண்களும் சிறுமிகளும்) தலையில் சூடிக் கொள்ள வீட்டுத் தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றிலும் பானைச் செடியாகவும் வளர்க்கின்றனர். மேற்கூறிய அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் (வாசனைத் திரவியத் தொழில் போன்ற) இதரப் பயன்பாடுகளுக்காக விவசாய நிலங்களில் விற்பனைக்காகவும் பயிராகிறது.
மகாராட்டிரம் மாநிலத்தின் மும்பை தொடங்கி தெற்காக இந்தியாவின் பல இடங்களிலும் மல்லிகை மலரை விற்போர், நகர வீதிகள், கோயில் சுற்றுப்புறங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பெரும் வணிகவிடங்கள் போன்றவற்றில் அதனை ஆயத்த மாலைகள் என்றாகவோ அல்லது மோத்தியா அல்லது மொகாரா என்னும் அதன் அடர் வகையின் மலர்க் கொத்துக்களை அவற்றின் எடையின் அடிப்படையிலோ விற்பதைக் காணலாம். இது கொல்கொத்தாவிலும் அன்னியமான காட்சியல்ல. வடமாநிலப் பெண்களும் சிறுமிகளும் பொதுவாக கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை என்பதால், தெருவோர விற்பனைகள் அங்கு குறைவாகவே காணப்படும்.
மல்லிகை மலரை தென்னிந்திய பெண்டிர், அதன் மணம் மற்றும் அழகுக்காகவே தம் கூந்தலில் சூடுகின்றனர். மேலும், இது திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் மலர் அலங்காரங்களுக்கும் பயன்படுகிறது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பங்களா பகுதியில் பயிராகும் மல்லிகை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.[மேற்கோள் தேவை]
மல்லிப்பேரினத்தில் மலரும் பூக்களை விற்கும் பூவியாபாரிகள் மாலைகளாகவும், உதிரிப்பூக்களாகவும், பூச்சரமாகவும் கட்டி விற்கின்றனர்.[26] இவை கடவுள் வழிபாட்டுத் தலங்களிலும்,[27] பெண்கள் தலையில் சூடவும், நீத்தார் சடங்குகளிலும் இம்மலர்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்திய மத வழிபாடுகளிலும், இசுலாமிய நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.[28]
பூவியாபாரம் இந்தியாவெங்கும் நடைபெறுகிறது.உலர்ந்த இவ்வகை மலர்களும் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன. மல்லிதேநீர் விற்பனையும் சில இடங்களில் நடைபெறுகின்றன.[29]
தமிழ்நாட்டின் நடு மாவட்டங்களான சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சிற்றூர்களான ஆத்தூர், வ. களத்தூர் போன்ற சிற்றூர்களில் வயிற்றுப்போக்கு, பேறுகாலத்தில் சுரக்கும் தாய்ப்பால் கட்டுபாடு தேவைப்படும் சூழ்நிலைகளில் மல்லிகைப் பூவினை(மார்பங்களில் சரமாக வைத்துக் கொள்வதால் அதிகமாக உள்ள தாய்ப்பால் சுரப்பு, குறைவதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.) பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இத்தகைய பயன்பாடுகள் மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி செய்தல் நல்லது.[30][31]
மல்லிகை இனிப்புக் கூழ்
ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக்கூழ் புகழ் பெற்றது.[சான்று தேவை] பெரும்பாலும், மல்லிகை மலர்ச் சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக்கூழ்[32] சிறுரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது.
மல்லிகைச் சார எண்ணெய்
மல்லிகைச் சார எண்ணெய் பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணெய்க்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணெயில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச்சார எண்ணெய் தயாரிக்கும் நாடுகளாக இந்தியா, எகிப்து, சீனா, மொரோக்கோ நாடுகளைக் கூறலாம்.[33]
திட, திரவ நறுமணப் பொருட்களில் பயன்பாடு
இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல், சிகேடோல் ஆகியன மல்லிகையின் சிறப்பான நறுமணத் தருவதாக உள்ளது. ஆகவே இது திட, திரவ நறுமணப் பொருட்கள் உருவாக்க அதிகம் பயன்படுகிறது.
தமிழ்நாடு "மல்லிச்சரம்"
கோயிலில் "பூச்சர" விற்பனை
சென்னையின் பெருமல்லிகை மொட்டு. இவ்வகை மல்லிகள் வணிகத்திற்கு குறைவாகவே பயனாகின்றன.
மல்லித் தாம்பூல வரவேற்பு
வங்கத்திருமண மாலை
வேறுபடும் பேரின மல்லிகள்
தாவரவியல் வகைப்பாட்டின்படி வேறுபட்டு இருக்கும் சில தாவர இனங்களின் பெயர்கள், இப்பேரினப் பெயர்களைப் போன்றே, பொது மக்கள் அழைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
↑Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, doi:10.1111/boj.12385
↑முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link
First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
↑Townsend, C. C. and Evan Guest (1980). "Jasminum officinale," in Flora of Iraq, Vol. 4.1. Baghdad, pp. 513–519.
↑USDA, ARS, National Genetic Resources Program. "Jasminum L." Germplasm Resources Information Network, National Germplasm Resources Laboratory. Archived from the original on January 26, 2012. Retrieved November 22, 2011.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Anabel Bachour (23 February 2017). "Damascus, the City of Jasmine". Peacock Plume, Student Media, The American University of Paris, France. Retrieved 1 அக்டோபர் 2023.
"African Plants Database". Natural History Museum of Geneva | South African National Biodiversity Institute, the Conservatoire et Jardin botaniques de la Ville de Genève and Tela Botanica.