சாந்தநாதசுவாமி கோயில், புதுக்கோட்டை
சாந்தநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மூலவர்இக்கோயிலின் மூலவர் சாந்தநாதசுவாமி ஆவார். இறைவி வேதநாயகி என்றழைக்கப்படுகிறார். [1] மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார்.[2] அமைப்புதிருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர், சரபேஸ்வரர், ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தீர்த்தம் பல்லவன் குளம் ஆகும்.[2] சிறப்புஇக்கோயில் கி.பி.1071-1123இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1] பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்றழைக்கப்பட்டது.[2] விழாக்கள்ஆனி மாதம் பத்து நாள்கள், மாசி மகம், தெப்பத் திருவிழா ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் வழிபாட்டிற்காக காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.[1] ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிசேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia