சாம்பியன்ஸ் லீக் இருபது20
சாம்பியன்ஸ் லீக் இருபது20 (Champions League Twenty20) என்பது இந்தியா, ஆத்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்.[1] இத்தொடர் அப்போதைய ஐசிசியின் தலைவராக இருந்த என். ஸ்ரீனிவாசன் என்பவரால் நடத்தப்பட்டது.[2] உள்ளூர் இருபது20 போட்டித் தொடர்களின் வெற்றி காரணமாக, முக்கியமாக இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் வெற்றி காரணமாக 2008இல் இப்போட்டித் தொடர் துவங்கப்பட்டது.[3] முதலாவது போட்டித் தொடர் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து 2008 அக்டோபர் முற்பகுதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.[4] ஆயினும் அது தாமதமானது. பின்னர், போட்டித் தொடர் திசம்பர் 3இலிருந்து திசம்பர் 10, 2008 வரை நடைபெறுவதாக இருந்தது.[5] பின்னர், நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதல்கள் காரணமாகப் போட்டித் தொடர் கைவிடப்பட்டது.[6] முதலாவது போட்டித் தொடர் அக்டோபர் 2009இல் நடைபெற்றது. குறைவான பார்வையாளர்கள், ரசிகர்களின் ஆர்வமின்மை, நிலையற்ற விளம்பர ஆதரவுகள் உள்ளிட்ட காரணங்களால் இத்தொடரை உருவாக்கிய மூன்று துடுப்பாட்ட வாரியங்களும் தொடரைக் கைவிடுவதாக அறிவித்தன.எனவே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் இதன் கடைசித் தொடராக அமைந்தது.[10]
போட்டி முடிவுகள்
மூலம்: Cricinfo [21] இதையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia