சிகார்ஜி சமணக் கோயில்கள்
சிகார்ஜி (Shikharji) (Śikharjī), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தில் சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் உள்ள கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள பரஸ்நாத் மலையில் அமைந்துள்ளது. சிக்கார்ஜி சமணப் புனித யாத்திரைத் தலங்களில் மிகவும் முக்கியமானதாகும். சிக்கார்ஜியில் பல சமணத் தீர்த்தங்கரர்கள் முக்தி அடைந்துள்ளனர்.[1][2] மேலும் சிக்கார்ஜியில் 24 தீர்ததங்கரர்களுக்கு தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளது. எனவே சமணர்களுக்கு சிக்கார்ஜி, முக்கிய புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3] அமைவிடம்சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து 190 கி.மீ. தொலைவிலும்; பொக்காரா நகரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; தன்பாத் நகரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெயர்க்காரணம்![]() ![]() சிகார்ஜி எனும் வட மொழிக்கு வணங்குதற்குரிய கொடுமுடி எனும் பொருளாகும். பரஸ்நாத் மலை பல கொடிமுடிகளைக் கொண்டதாகும். சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் இங்குள்ள மலையில் முக்தி அடைந்ததால்[4] இம்மலைக்கு பரஸ்நாத் மலை எனப் பெயராயிற்று. பரஸ்நாத் மலையின் கொடுமுடிகளில் அமைந்த சமண சமயத்தின் முதல்வர்களாக 24 தீர்த்தங்கரர்களின் சன்னதிகளுக்கு சிகார்ஜி என அழைக்கப்படுகிறது. சிகார்ஜி, சுவேதாம்பரர் மற்றும் திகம்பர சமணர்களின் முக்கியப் புனிதத் தலங்களில் ஒன்றாகும். சிகார்ஜி மலை வலம் வருதல் சமணர்களின் சமயச் சடங்காகும். புவியியல்மேற்கு இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் அமைந்த சிகார்ஜி மலைக்கோயில், தில்லி - கொல்கத்தாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2ல் அமைந்துள்ளது.[5] சிகார்ஜி சமணக் கோயில்கள், 4429 அடி உயரமுள்ள பரஸ்நாத் மலையின் மதுபன் காட்டில் அமைந்துள்ளது.[6] கோயில்கள்சிகார்ஜியில் சமண சமயத் தீர்த்தங்கரர்கள், அருகதர்கள் மற்றும் கணாதரர்களின் கோயில்கள் 18ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். அவைகள்: போக்குவரத்து வசதிகள்அருகில் உள்ள தொடருந்து நிலையம், மதுபன் கிராமத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ரி பஜாரில் உள்ள பரஸ்நாத் தொடருந்து நிலையமாகும். தில்லி - கான்பூர் - முகல்சராய் - கயா - அசன்சால் வழியாகச் தொடருந்துகள், பரஸ்நாத் தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது. மும்பை, தில்லி, ஜெய்ப்பூர், அஜ்மீர், பாட்னா, அலகாபாத், கான்பூர், ஜம்மு, கல்கா முதலிய நகரங்களை பரஸ்நாத் தொடருந்து நிலையம் இணைக்கிறது. படக்காட்சியகம்
இதனையும் காண்கவெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia