ரிசபநாதர் அல்லது ரிசபதேவர் அல்லது ஆதிநாதர் (Rishabha or Adinatha) சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமய தீர்த்தாங்கரர்களில் முதலாமவர். 'தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள்.[1]இச்வாகு அரச குலத்தில்கோசல நாட்டு மன்னர் நபிராஜா–மருதேவி தம்பதியர்க்கு அயோத்தில் பிறந்தவர்.[2]கோசல நாட்டின் ரிஷபர் என்றும் அழைக்கப்பட்டவர். ரிஷபதேவரின் மூத்த மகன் பரதன் பெயரில், இந்தியா நாட்டை பாரதவர்சம் என்றும் பரத கண்டம் என்று அறியப்பட்டது..
பண்டைய வரலாறு
ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.
கோசல நாட்டின்அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் நகரை தலைநகராகக் கொண்ட தென் பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கிய ரிஷபதேவர்[3] பின் துறவறம் பூண்டு, இமயமலை நோக்கி பயணமானார். கையிலை எனப்படும் அஷ்டபாத மலையை கடக்கையில், இறைவன் , சமவசராணம் (samavasarana) எனப்படும் தெய்வீகத்தைப் பரப்பும் கூடத்தை ரிஷபதேவருக்கு அமைத்துக் கொடுத்தார்.[4] தனது 84வது அகவையில் கையிலை மலையில்வீடுபேறு அடைந்தார். அவரது உபதேசங்கள் அடங்கிய நூலின் தொகுப்பிற்கு பூர்வ வேதம் என்பர்.[5]
பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா பாரத வர்சம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று.[2][6]
Sangave, Vilas Adinath (2001). Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and Culture. Mumbai: Popular prakashan. ISBN81-7154-839-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
Mittal, J.P. (2006). History of Ancient India: From 7300 BC to 4250 BC. Atlantic Publishers & Dist. ISBN978-81-269-0615-4. {{cite book}}: Invalid |ref=harv (help)