சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் (President of the Republic of Singapore; மலாய்: Presiden Republik Singapura) என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். சனாதிபதி என்று அழைக்கப்படுகிறார்.[1]
குடியரசுத் தலைவர் எனும் அதிகாரப்பூர்வ அழைப்புப் பெயர், பெரும்பாலும் ஒரு சடங்குப் பெயராகவே கருதப் படுகிறது. 1993-ஆம் ஆண்டிற்கு முன்பு, சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
பொது
1991-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் அரசியல் சாசனங்கள் திருத்தப்பட்டன. அதன் பிறகு, குடியரசுத் தலைவர், சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் தெங் சியோங். 1991-ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்குச் சில தனிப்பட்ட உரிமைகள் அளிக்கப்பட்டன. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா சிங்கப்பூர் ஆகும்.
வரலாறு
1965-ஆம் ஆண்டில் மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்று, சிங்கப்பூர் குடியரசாக மாறியது. அதன் பிறகு அதே 1965-ஆம் ஆண்டில் அதிபர் எனும் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய அரசியலமைப்பு; சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவிக்கு கடுமையான தகுதி நிபந்தனைகளை விதிக்கிறது. 1993-க்கு முன்னர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
அரசியலமைப்புத் திருத்தங்கள்
1991-இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் விளைவாக, குடியரசுத் தலைவர் பதவியானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது. அரசாங்கச் செலவுகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான முக்கிய நியமனங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்ட பதவியாகவும் மாறியது.[3]
1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆளுமையைப் பெற்றது. அப்போது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் எனும் பதவி உருவாக்கப்பட்ட வில்லை. அந்தப் பதவி யாங் டி பெர்துவான் நெகாரா(Yang di-Pertuan Negara) என்று அழைக்கப்பட்டது. சிங்கப்பூரின் கடைசி யாங் டி பெர்துவான் நெகாரா, யூசுப் இசாக். இவர்தான் சிங்கப்பூரின் முதல் அதிபரும் ஆகும்.
↑ 4.04.14.24.34.4Former Presidents, Istana Singapore: Office of the President of the Republic of Singapore, 28 April 2006, archived from the original on 1 August 2008, retrieved 24 January 2009.
↑President S R Nathan, Istana Singapore: Office of the President of the Republic of Singapore, 4 May 2006, archived from the original on 22 August 2008, retrieved 24 January 2009.
↑Elgin Toh (1 September 2017), "Pillay takes on role of acting president: CPA chairman will fill post until after Polling Day on Sept 23, or Nomination Day on Sept 13", The Straits Times, p. A9.