சின்டு யுசுடாசியசு
![]() சின்டு யுசுடாசியசு (Sint Eustatius) கரிபியன் நெதர்லாந்தின் அங்கமாகும்: அதாவது இது ஓர் கரிபியன் தீவும் நெதர்லாந்தின் சிறப்பு நகராட்சியுமாகும்.[4] இத்தீவு லீவர்டு தீவுகளின் வடக்குப் பகுதியில், கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கே, அமைந்துள்ளது. செயிண்ட் கிட்சு தீவிற்கு வடமேற்கிலும் சேபா தீவிற்கு தென்கிழக்கிலும் உள்ளது. இதன் வட்டாரத் தலைநகரமாக ஓரான்யுசாடு உள்ளது. இத்தீவின் பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) ஆகும். 2001 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 3,543 ஆகும். சதுரக் கிலோமீட்டருக்கு 169 நபர்களாக மக்களடர்த்தி உள்ளது. அலுவல்முறை மொழியாக டச்சு மொழியும், "தினசரி வாழ்வின் மொழியாகவும்" கல்வி கற்பிக்கப்படும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது.[5] ஆங்கில அடிப்படையிலான உள்ளூர் கிரியோல் மொழியும் முறைசாராது பேசப்படுகின்றது. முன்னதாக நெதர்லாந்து அண்டிலிசின் அங்கமாக இருந்த சின்டு யுசுடாசியசு அக்டோபர் 10, 2010 முதல் நெதரலாந்தின் சிறப்பு நகராட்சியாக நிறுவப்பட்டது.[6] மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia