பாண்டவர் குகைகள்![]() ![]() திரிரஷ்மி லேனி அல்லது பாண்டவர் குகைகள் அல்லது நாசிக் குகைகள் (Trirashmi Leni) மராத்தி மொழியில் லேனி என்பதற்கு குகை என்று பொருள். இதனை பாண்டவர் குகைகள் என உள்ளூர் மக்கள் அழைப்பர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஹுனயான பௌத்த சமயத்தின் 24 குடைவரைக் கோயில்களின் தொகுப்பாகும். 18வது எண் கொண்ட குகை பிக்குகள் பிரார்த்தனை செய்யும் சைத்தியமாகவும், பிற குகைகள் பௌத்த பிக்குகள் தங்கும் விகாரங்களாக உள்ளது.[1] அமைவிடம்இக்குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் நகரத்திற்குத் தெற்கில் 80 கி.மீ. தொலைவிலும், பஞ்சவடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது. குகைகள்இந்த திரிரஷ்மி பௌத்தக் குகைகளை உள்ளூர் மக்கள் தவறுதலாக பாண்டவர் குகைகள் என அழைக்கின்றனர். சாதவாகனர் மற்றும் மேற்கு சத்திரபதி அரச குல மன்னர்கள், வணிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியால், கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முடிய, மலையைக் குடைந்தெடுத்து இக்குகைகளை, ஹுனயான பௌத்த பிக்குகள் தங்கும் விகாரங்களாகவும், பிரார்த்தனை செய்யும் சைத்தியங்களாகவும் பயன்படுத்தினர். திரிரஷ்மி எனும் பெயரை திரங்கு என இக்குகை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2][3] திரிரஷ்மி என்பதற்கு வட மொழியில் மூன்று சூரியக் கதிர் எனப்பொருளாகும். இக்குகைகளில் புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் கற்சிற்பங்கள் உள்ளது. மேலும் இக்குகையில் பௌத்த விகாரங்களும், சைத்தியங்களும் உள்ளது.[4][5] சில குகைகள் ஒன்றுடன் ஒன்று கல் ஏணியால் இணைக்கப்பட்டுள்ளது. திரிரஷ்மி மலையின் அடிவாரத்திலிருந்து மலைக் குகைகளுக்கு செல்லப் படிக்கட்டுகள் உள்ளது.[6] படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
19°56′23″N 73°44′55″E / 19.93959°N 73.74849°E |
Portal di Ensiklopedia Dunia