கர்ணல் நரேந்திர குமார் லெப்டினண்ட்-ஜெனரல் பி. என். ஹூன் லெப்டினண்ட்-ஜெனரல் எம். எல். சிப்பர் மேஜர் ஜெனரல் சிவசர்மா பிரிகேடியர்-ஜெனரல் வி. ஆர். இராகவன் பிரிகேடியர்-ஜெனரல் சி. எஸ். நுக்யால் பிரிகேடியர்-ஜெனரல் ஆர். கே. நானாவதி பிரிகேடியர்-ஜெனரல் வி. கே. ஜெட்லி
லெப்டினண்ட்-ஜெனரல் சையத் அலி அக்பர் கான் பிரிகேடியர்-ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள சியாச்சின் (சிவப்பு புள்ளிகள்) பனிமலைப் பகுதிகள்சியாச்சின் பனியாற்றின் செய்மதிக் காட்சி
சியாச்சின் பிணக்கு (Siachen Conflict), அல்லது சியாச்சின் போர், இந்தியாவின்ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கிலிருந்து வடகிழக்கே ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இமயமலையில்காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனி மலையில் 900 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நிலத்தின் உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெறும் இராணுவப் பிணக்கு ஆகும். உலகின் மிக உயரத்தில் அமைந்த சியாச்சின் போர்க்களத்தில் நடந்த போர், 2003 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது.[7][8],
1984 ஆம் ஆண்டில் இந்திய இராணுவம், ஆபரேஷன் மேகதூத் நடவடிக்கையின் மூலம், சியாச்சின் பனி மலையின் எழுபது சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை இந்தியா தக்க வைத்து கொண்டதன் மூலம் சியாச்சின் பிணக்கு மேலும் முற்றியது.
[9][10]டைம் இதழ் செய்தியின் படி, இந்தியா சியாச்சின் பகுதியில் 1000 சதுர கிலோமீட்டர் பகுதியை கைப்பற்றியதாக தெரிவிக்கிறது. [11]
உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த இந்தியாவின் ஹெலிபேட், சியாச்சின் பனிமலையில் 21,000 அடி (6,400 மீ) உயரத்தில் உள்ளது. இந்த ஹெலிபேட் தளத்தின் வாயிலாக இந்திய வீரர்களுக்கு உணவு மற்றும் இதர தளவாடங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
கார்கில் போருக்கு சியாச்சின் பிணக்கே முக்கிய காரணம் என இந்தியாவின் முன்னாள் வடக்கு கட்டளைப் பிரிவுத் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் கே. டி. பட்நாயக் கூறியுள்ளார்.[12]
என்.ஜெ. 9842
1949 ஆம் ஆண்டில் செய்து கொண்ட கராச்சி உடன்படிக்கை மற்றும் 1972 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தப்படி இந்திய- பாகிஸ்தான் அரசுகள் சியாச்சின் பனிமலையில் என்.ஜெ.9842 என்றழைக்கப்படும் போர் நிறுத்த எல்லைக்கோட்டை வரையறுத்தது. தெளிவற்ற இந்த போர் நிறுத்த எல்லைக்கோட்டை பின்னர் இரு நாடுகளும் மதியாது போரிட்டுக் கொண்டு வருகிறது.[13][14]
சியாச்சின் பிணக்கால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள்
இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து ஆறாயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை உலகின் மிக உயரமான போர்களமாகும்.[15][16] சியாச்சின் மலைப்பகுதிகளில் ஆக்சிசன் குறைவாக இருப்பதால், மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமம் ஆகும்[17]. சியாச்சின் பனிமலையை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் 13 ஏப்ரல் 1984 முதல் போரிட்டு வருகிறது. இப்போரில் இதுவரை இருதரப்பிலும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களை இருதரப்பு நாடுகளும் இழந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். போரில் உயிர் நீத்த விரர்களைக் காட்டிலும், இங்கு நிலவும் பூச்சியம் பாகைக்கு கீழ் காணப்படும் கடுங்குளிராலும், கடுமையான பனிப்பொழிவாலும், பனிச்சரிவுகளாலும் அதிக வீரர்கள் உயிர் இழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் இருக்கும் சியாச்சின் இராணுவ முகாம்களில் உள்ள வீரர்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்த் தளவாடங்கள் முதலியவைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு இந்தியா ஒரு நாள் ஒன்றிற்கு 6.8 கோடி ரூபாய் செலவழிக்கிறது.
சமீபகால பனிச்சரிவால் ஏற்பட்ட உயிர் இழப்புகள்
7 ஏப்ரல் 2012-இல் சியாச்சின் பனிமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 140 பாகிஸ்தானிய போர் வீரர்கள் இறந்தனர்.[18][19]3 பிப்ரவரி 2016-இல் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பத்து இந்திய படைவீரர்கள் இறந்தனர்.[20].[21] மேலும் ஜனவரி 2016-இல் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு இந்திய படைவீரர்கள் உயிரிழந்தனர்.
Myra MacDonald (2008) Heights of Madness: One Woman's Journey in Pursuit of a Secret War, Rupa, New Delhi பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-291-1292-2. The first full account of the Siachen war to be told from the Indian and Pakistani sides.
R. Baghel & M. Nüsser (2015). Securing the heights: The vertical dimension of the Siachen conflict between India and Pakistan in the Eastern Karakoram. Political Geography 48, 24–36. doi:10.1016/j.polgeo.2015.05.001 Article (CC-BY) discussing the role of geography in the Siachen conflict.