சியாம் (இசையமைப்பாளர்)
சியாம், சாமுவேல்,ஜோசப், ( Shyam) (பிறப்பு 19 மார்ச் 1937) என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மலையாள இசையமைப்பாளர் ஆவார். இவர் 1970களின் நடுப்பகுதியிலிருந்து 1980களின் பிற்பகுதி வரை, மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக, ஏறத்தாழ 200 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அக்காலத்தின் அனைத்து முதன்மை இயக்குநர்களுடனும் பணிபுரிந்த இவர், ஜெயனின் பல வெற்றிப் படங்களுக்கும், மம்முட்டி, மோகன்லாலின் ஆரம்பகால திரைப்படங்களுக்கும் இசையமைத்தார்.[1] தொழில்இசை மேதைகள் எம். எஸ். விஸ்வநாதன், சலில் சௌதுரி ஆகியோரிடம் சியாம் பயிற்சி பெற்றார்.[2] அவர்கள் இருவரும் இவருக்கு 'ஷியாம்' என்று பெயர் மாற்றினர். இவர் வயலின் கலைஞராக பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனுடன் பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டு வெளியான மன்யஸ்ரீ விஸ்வாமித்திரன் திரைப்படத்தில் மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] திரைப்படப் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia