சியுரி
![]() சியுரி அல்லது சுவ்ரி (Suri-Siuri) (pronounced [sIʊərɪ]) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடமேற்கே 224.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகமைந்த நகரங்கள்: ஆசன்சோல் 79 கி.மீ.; துர்காபூர் 60 கி.மீ. மற்றும் ராணிகஞ்ச் 62 கி.மீ.. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 18 வார்டுகளும், 15,385 வீடுகளும் கொண்ட சியுரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 67,864 ஆகும். அதில் 34,579 ஆண்கள் மற்றும் பெண்கள் 33,285 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5935 (8.75%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.95% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 73.65%, முஸ்லீம்கள் 25.86% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[1] தொடருந்து நிலையம்சிவ்ரி தொடருந்து நிலையம் வழியாக கொல்கத்தா, ராஞ்சி, சூரத், புரி, கவுகாத்தி, திப்ருகார் மற்றும் தாம்பரம் போன்ற நகரங்களுக்கு விரைவு வண்டிகளும், பயணியர் வண்டிகளும் செல்கிறது.[2] சியுரிலிருந்து ஆசன்சோல் செல்ல 6 தொடருந்துகள் உள்ளது.[3] கல்வி
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia