சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது (National Film Award for Best Female Playback Singer) 1968 முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அந்தந்த ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் பின்னணி பாடிய பெண் பாடகர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இவ்விருதில்,1974 ஆம் ஆண்டுவரை ஒரு நினைவுத் தட்டும் சான்றிதழும் அளிக்கப்பட்டு வந்தது. 1975 இலிருந்து வெள்ளித் தாமரையும் சான்றிதழும், 2013 ஆம் ஆண்டில் 61 ஆவது விழாவில் ₹50,000 (ஐஅ$580) பணப் பரிசும் அளிக்கப்படுகிறது இவ்விருதுபெற்ற முதல் பாடகர் பி. சுசீலா ஆவார். உயர்ந்த மனிதன் தமிழ்த் திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய நாளை இந்த நேரம் பார்த்து ஓடிவா நிலா..., என்ற பாடலுக்காக 16 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை அதிகமுறை பெற்றவர்களில் பின்னணிப் பாடகர் சித்ரா (ஆறு முறை) முன்னணியில் உள்ளார். இரண்டாவது நிலையில் உள்ளவர் ஐந்து முறை விருதுபெற்றப் பாடகர் பி. சுசீலா. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, எஸ். ஜானகி, சிரேயா கோசல் இருவரும் நான்குமுறையும்,லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம் இருவரும் மூன்று முறையும் இவ்விருது பெற்றுள்ளனர். ஆஷா போஸ்லே, ஆல்கா யாக்னிக், ஆரத்தி அங்காலிகர் (Arati Ankalikar-Tikekar) மூவரும் இருமுறை இவ்விருது பெற்றுள்ளனர். மூன்று வெவ்வேறு மொழிப்பாடல்களைப் பாடி இவ்விருதினைப் பெற்றவர்கள் எஸ். ஜானகி, சித்ரா, சிரேயா கோசல் ஆவர். ஒரே ஆண்டில் இரு வெவ்வேறு மொழிகளில் பாடிய இரு வெவ்வேறு பாடல்களுக்காக இவ்விருதினைப் பெற்ற ஒரே பாடகர் சிரேயா கோசல் மட்டுமே ஆவார். உத்ரா உன்னிகிருஷ்ணன்தான் (10 வயதில்) இவ்விருதினைப் பெற்ற இளம் பாடகர்.[1][2]ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம்தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[3]. 1973 ஆண்டுக்கு இவ்விருது எவருக்கும் வழங்கப்படவில்லை.
விருதுபெற்றோர் பட்டியல்
விருதுபெற்றவர்களின் பட்டியல்: வழங்கப்பட்ட ஆண்டு, பாட்டு, திரைப்படம், மொழி, சான்று
For purity of diction and melodic excellence; for emotive suggestiveness and lyrical appeal; for a quality of expression which is intensely moving; for rendering the theme song "Senthoora Poove" with deep feeling, reflecting the romantic dreams of youth, slowly merging into the shadows of tragic destiny.
"ஆப் கி யாத் ரகி ராத் பார் (Aap Ki Yaad Aati Rahi Raat Bhar)"
காமன் (Gaman)
இந்தி
For a hauting rendition of Makhdun Mohluddin's famous ghazal "Aap Ki Yaad Aati Rahi Raat Bhar". The chastity of style, the purity of enunciation and the freshness of voice contribute to make it into a memorable song.
For her husky and haunting voice that brings a gentle, nostalgic tone and tenor to the film Abosheshey. The languid raw sensuality of her singing is heightened by the absence of musical accompaniment.