சிறுத்தைப் பூனை (leopard cat) என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். இது பார்க்க சின்னஞ்சிறு சிறுத்தை போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை தென் மற்றும் கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. 2002 ஆம் ஆண்டு முதல் இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று செம்பட்டியலில் இடம்பெற்றது. இது பரவலாக இருந்தாலும், அது வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]
சிறுத்தை பூனை கிளையினங்கள் நிறம், வால் நீளம், மண்டை வடிவம் மற்றும் அளவுகளால் வேறுபடுகிறன. [3]
பண்புகள்
சிறுத்தைப் பூனையின் அளவு என்பது வீட்டுப் பூனையின் அளவு ஆகும். இது காண்போரை கவரும் வண்ணம் கொண்டிருக்கும். வெளிரிய மஞ்சள் நிற உடலும், அதில் சாம்பல் அல்லது கருப்பு நிறப் புள்ளிகளும் இருக்கும். நீண்ட கால்கள் மற்றும் சிறிய தலையில் இரு முக்கிய இருண்ட கோடுகள் செல்லும். வெப்ப மண்டலங்களில் , சிறுத்தை பூனைகள் 0.55 முதல் 3.8 கிலோகிராம் எடைகொண்டதாகவும், 38.8 இல் இருந்து 66 செமீ (15.3 இல் இருந்து 26.0 அங்குலம்) நீளம் உடையதாகவும், 17.2 இல் இருந்து 31 செமீ (6.8 இல் இருந்து 12.2 அல்குல) நீள வால் கொண்டவை. [4]
உணவு
இவை ஊணுண்ணிகள் ஆகும். இவை சிறு பாலூட்டிகள், பல்லிகள், பறவைகள் ஆகியவற்றை உண்கிறது.
↑Groves, C. P. (1997). "Leopard-cats, Prionailurus bengalensis (Carnivora: Felidae) from Indonesia and the Philippines, with the description of two new species". Zeitschrift für Säugetierkunde62: 330–338.