சிவகாமி என்பது பிப்ரவரி 20ஆம் திகதி 2018ஆம் ஆண்டு முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 17, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ஆகும்.
இந்த தொடரில் நீனு கார்த்திகா, வினோத் பாபு, நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், பெனிடோ அலெக்ஸ், சுபாஷிணி கண்ணன் மற்றும் பி. நிலானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். [1][2]
இந்த தொடர் ஜாதி மாறி திருமணம் செய்யும் இரு இளம் ஜோடிகள் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை மையமாகவே வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[3] இந்த தொடர் திசம்பர் 21, 2019 அன்று 495 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
மகேஸ்வரி என்ற கிராமத்துப் பெண் தன் மகளை ஐ.பி.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். அவர் அனைத்துப் போராட்டங்களையும் கடந்து தம் கனவை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதே இத்தொடரின் கதைக்களம் ஆகும்.
20 வருடம் கழிந்து ஊருக்கு ஐபிஎஸ் அதிகாரியாக வரும் சிவகாமி தனது தந்தையை கொண்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பாளா இல்லை அவளே அவர்களை தண்டிப்பாளா என்பது தான் கதை
உயர் ஜாதி குடும்பத்தை சேர்ந்த செல்ல பெண்ணு, ராஜ்குமாரை திருமணம் செய்த பிறகு உறவினருக்கு எதிரியாகின்றாள், தனது கணவன் இறந்த பிறகு தனி ஒரு பெண்ணாக இருந்து தனது மகளை ஒரு போலீஸ் அதிகாரியாக்குகின்றார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், தப்பு செய்யுறவர்களை தட்டி கேட்கும் குணம் கொண்டவன், ஜாதி மாறி மகேஸ்வரியை திருமணம் செய்ததால் இவனை கொலை செய்கின்றார்.
பெனிடோ அலெக்ஸ் - விவேக் (பகுதி: 200-495)
விவசாயகிகளுக்காக ஆதரவாக போராடுறவன்.
மகேஸ்வரி குடுமப்த்தினர்
சுபாஷினி கண்ணன் - கிருஷ்ணவேணி
மகேஸ்வரியின் தாய்
பாலா சுப்பிரமணி - ராஜவேல்
மகேஸ்வரியின் தந்தை
ஆனந்த கிருஷ்ணன் - சக்திவேல்
மகேஸ்வரியின் சகோதரன், பத்மாவதியின் கணவன். ராஜ்குமார் கொலையில் இவருக்கும் தொடர்பு உண்டு. (வில்லன்)
நிவிஷா - தேன்மலர்
மகேஸ்வரியின் சகோதரி, பாரதியின் மனைவி (இந்த தொடரில் இறந்து விடடார்)
ஏகவள்ளி - பத்மாவதி சக்திவேல்
ஈஸ்வரியின் மகள், சக்திவேலின் மனைவி. நல்ல குணம் கொண்டவள். மகேஸ்வரி மீது பாசம் கொண்டவள்.
பி. நிலானி - ஈஸ்வரி
ராஜவேலுன் சகோதரி, பத்மாவதி மற்றும் மாணிக்கத்தின் தாய். ஜாதி அகங்காரம் கொண்ட பெண்.
அலெக்ஸாண்டர் பிரான்சிஸ் - மாணிக்கம்
கேட்ட குணம் கொண்ட காவல் அதிகாரி, மகேஸ்வரியின் முறை பையன்.
ரொசாரியோ - புன்னியாகோடி (பகுதி: 1-207)
ஈஸ்வரியின் கணவன், மாணிக்கம் மற்றும் பத்மவிதியின் தந்தை. சக்திவேல் மற்றும் மாணிக்கத்தை கெட்டவளிக்கு கொண்டு செல்லவது இவர் தான். (இந்த தொடரில் இறந்து விடடார்)