சீக்‌ஷா

சீக்ஷா, சமசுகிருத மொழி வேத அட்சரங்களை (எழுத்துக்களை) ஒலிப்பதின் இலக்கணத்தை வரையறை செய்து கொடுப்பதே சீக்‌ஷா சாஸ்திரம். சீக்‌ஷா (உச்சரிப்பு) சாஸ்திரம், வேதத்தின் ஆறு அங்கங்களில் (வேதாங்கங்கள்) முதல் அங்கம்.

வேத மந்திரங்களுக்கு உயிர், அதன் உச்சரிப்பில் உள்ளதால் அதனை சரியாக உச்சரிக்க வேண்டும். இதனை அட்சர சுத்தம் என்பர். அத்துடன் ஒவ்வொரு எழுத்தையும் குரல் உயர்த்திச் சொல்வதா, தாழ்த்திச் சொல்வதா, சமமாகச் சொல்வதா என்ற வேறுபாடுகள் உண்டு. இந்த மூன்றையும் முறையே உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்பர். இவை இருக்க வேண்டியபடி இருந்தால் அதற்கே ஸ்வர சுத்தம் என்று பெயர். அட்சர சுத்தம், ஸ்வர சுத்தம் இரண்டும் இருந்தால்தான் மந்திரங்கள் பலன் தரும். மந்திரங்களின் பொருளைவிட, ஒலிக்கும் முறை சரியாக இருப்பது முக்கியம். மந்திரக் கூட்டமாக உள்ள வேதத்துக்கு மூச்சு ஸ்தானம்.[1]

மேற்கோள்கள்

  1. சீக்ஷா சாஸ்திரத்தின் மற்ற சிறப்புகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya