சீசியம் பர்மாங்கனேட்டு 1 °செல்சியசு வெப்பநிலையில் 0.97 கிராம்/லிட்டர், 19 °செல்சியசு வெப்பநிலையில் 2.3 கிராம்/லிட்டர் மற்றும் 59 °செல்சியசு வெப்பநிலையில் 12.5 கிராம் /லிட்டர் கரைதிறனுடன் கரையக்கூடியதாகும்.[2] ரூபிடியம் பர்மாங்கனேட்டு, அமோனியம் பர்மாங்கனேட்டு அம்மோனியம் பர்மாங்கனேட்டு மற்றும் பொட்டாசியம் பர்மாங்கனேட்டு சேர்மங்கள் போல இதன் படிக அமைப்பும் நேர்சாய்சதுரப் படிக அமைப்பாகும்.[3]
வேதிப்பண்புகள்
பொட்டாசியம் பர்மாங்கனேட்டைப் போலவே சீசியம் பர்மாங்கனேட்டும் இரண்டு-படிநிலைகளில் சிதைவடைந்து சீசியம் மாங்கனேட்டின் இடைநிலை சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கிறது. சீசியம் பர்மாங்கனேட்டு மாங்கனீசு டை ஆக்சைடு, சீசியம் ஆக்சைடு மற்றும் ஆக்சினாக உடைகிறது.[4] இதன் சிதைவு வெப்பநிலை 200 முதல் 300 பாகை செல்சியசு வரை இருக்கும்.[5] காற்றோடு கலக்கும் ஆக்சிசன் அப்பொருளில் 8 சதவீத நிறையிழப்பை உண்டாக்கும்.[5]