சீசியம் பெர்குளோரேட்டு
சீசியம் பெர்குளோரேட்டு (Caesium perchlorate) என்பது CsClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியத்தின் பெர்குளோரேட்டு உப்பாகும். வெண்மை நிறப் படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரிலும் எத்தனாலிலும் குறைவாகக் கரைகிறது. ஆனால் சூடான நீரில் நன்றாகக் கரைகிறது. ருபீடியம், பொட்டாசியம், இலித்தியம் மற்றும் சோடியம் வரிசைத் கார உலோக பெர்குளோரேட்டுகளில் மிகக் குறைவான கரைதிறன் கொண்டது சீசியம் பெர்குளோரேட்டு ஆகும். இப்பண்பே எடையறி பகுப்பாய்வு[3] மற்றும் தனித்துப் பிரித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இக்குறை கரைதிறன் பண்பு பிரான்சீயத்தை ஒரு கார உலோகம் என வகைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சீசியம் பெர்குளோரேட்டுடன் பிரான்சீயம் பெர்குளோரேட்டும் இணையாக வீழ்படிவாகிறது என்பது கவனிக்கத்தக்கது[4].
250 0 செல்சியசு|செ]] வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும்போது சிசியம் பெர்குளோரேட்டானது சீசியம் குளோரைடாகச் சிதைவடைகிறது. மற்ற பெர்குளோரேட்டுகள் போலவே உயர் வெப்பநிலைகளில் இது வலிமையான ஆக்சிசனேற்றியாகவும், கரிமப்பொருட்களுடனும் ஆக்சிசன் ஒடுக்கிகளுடனும் தீவிரமாக வினைபுரிகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia