முக்கோண வடிவவியலில் சுற்றுக்கூம்புவெட்டு (circumconic) என்பது ஒரு முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் வழியாகச் செல்லும் கூம்பு வெட்டு ஆகும்.[1] அதேபோல உட்கூம்புவெட்டு (inconic) என்பது முக்கோணத்தின் உட்புறமாக வரையப்பட்ட கூம்புவெட்டு ஆகும்.[2]
- A, B, C ஒரே கோட்டிலமையாத மூன்று வேறுபட்ட புள்ளிகள்.
- ΔABC முக்கோணத்தின் உச்சிகள் A, B, C.
- A முக்கோணத்தின் உச்சி மட்டுமல்லாது A இல் அமையும் முக்கோணத்தின் உச்சிக்கோணம் BAC ஐயும் குறிக்கும். இதேபோல B , C இரண்டும் முறையே முக்கோணத்தின் உச்சிக்கோணங்கள் ABC BCA ஐக் குறிக்கின்றன.
- a = |BC|, b = |CA|, c = |AB|, ΔABC முக்கோணத்தின் பக்கநீளங்கள்.
முந்நேரியல் ஆயதொலைவுகளில், ஒரு பொதுச் சுற்றுக்கூம்புவெட்டானது X = x : y : z என்ற முந்நேரியல் ஆயதொலைவுகள் கொண்ட புள்ளி X இன் இயங்குவரையாகும்.
மேலும் அக்கூம்புவெட்டு கீழ்வரும் சமன்பாட்டினை நிறைவு செய்யும்:
(u : v : w ஏதேனுமொரு புள்ளி)
சுற்றுக்கூம்புவெட்டின் மீதமையும் A, B, C தவிர பிற புள்ளிகள் ஒவ்வொன்றின் சமகோண இணையியங்களும் கீழ்க்காணும் கோட்டின் மீதமையும்.
= 0.
இக்கோடானது ΔABC இன் சுற்றுவட்டத்தை வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
- சுற்றுக்கூம்புவெட்டு நீள்வட்டமாக இருக்கும்பொழுது 0 ஆகவும்;
- சுற்றுக்கூம்புவெட்டு பரவளையமாக இருக்கும்பொழுது 1 ஆகவும்;
- சுற்றுக்கூம்புவெட்டு அதிபரவளையமாக இருக்கும்பொழுது 2 ஆகவும் இருக்கும்.
ΔABC இன் பொது உட்கூம்புவெட்டின் சமன்பாடு:
.
மையங்களும் தொடுகோடுகளும்
சுற்றுக்கூம்புவெட்டு
பொதுச் சுற்றுக்கூம்புவெட்டின் மையப்புள்ளி:
.
சுற்றுக்கூம்புவெட்டுக்கு முக்கோணத்தின் உச்சிகள் A, B, C இல் தொடுகோடாக அமையும் கோடுகள்:
= 0,
= 0,
= 0.
உட்கூம்புவெட்டு
பொது உட்கூம்புவெட்டின் மையப்புள்ளி:
.
ΔABC இன் பக்கக்கோடுகள் உட்கூம்புவெட்டின் தொடுகோடுகளாக அமையும். அவற்றின் சமன்பாடுகள்:
.
பிற பண்புகள்
சுற்றுக்கூம்புவெட்டு
- வட்டமல்லாத ஒவ்வொரு சுற்றுக்கூம்புவெட்டும் ΔABC இன் சுற்றுவட்டத்தை A, B, C அல்லாத வேறொரு புள்ளியில் சந்திக்கும். ”நான்காம் வெட்டும் புள்ளி” என அழைக்கப்படும் இப்புள்ளியின் முந்நேரியல் ஆயதொலைவுகள்:

- பொது சுற்றுக்கூம்புவெட்டின் மீதமைந்த புள்ளி P = p : q : r எனில், P இல் சுற்றுக்கூம்புவெட்டிற்குத் தொடுகோட்டின் சமன்பாடு:

என இருந்தால், இருந்தால் மட்டுமே, பொது சுற்றுக்கூம்புவெட்டு ஒரு பரவளையமாகும்.
என இருந்தால், இருந்தால் மட்டுமே, பொது சுற்றுக்கூம்புவெட்டு ஒரு செவ்வக அதிபரவளையமாகும்.
உட்கூம்புவெட்டு
என இருந்தால், இருந்தால் மட்டுமே, பொது உட்கூம்புவெட்டு ஒரு பரவளையமாகும். இது முக்கோணத்தின் ஒரு பக்கத்தினைத் தொட்டவாறும் மற்ற இரு பக்கங்களின் நீட்சியைத் தொட்டவாறும் அமையும்.
,
இரண்டும் வேறுபட்ட புள்ளிகள்;
எனில்:
t இன் மெய்யெண் மதிப்புகளுக்கு X இன் இயங்குவரை ஒரு கோடாகும்.
என வரையறுக்கப்பட்டால், X2 இன் இயங்குவரை ஒரு உட்கூம்புவெட்டாக, ஒரு நீள்வட்டமாக இருக்கும். அந்நீள்வட்டத்தின் சமன்பாடு:

இதில்:
- L = q1r2 − r1q2,
- M = r1p2 − p1r2,
- N = p1q2 − q1p2.
- முக்கோணத்தின் உட்புறமுள்ள ஒரு புள்ளியானது அம்முக்கோணத்தின் நடுப்புள்ளி முக்கோணத்தினுள் இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்தப் புள்ளி மூலமுக்கோணத்தின் உள்நீள்வட்டத்தின் மையப்புள்ளியாக இருக்க முடியும்.[3]:p.139 நடுப்புள்ளி முக்கோணத்துக்குள் அமையும் புள்ளியை மையமாகக் கொண்ட உள்நீள்வட்டம் தனித்துவமானது.[3]:p.142 அதாவது அத்தகைய உள்நீள்வட்டம் ஒன்றேயொன்றுதான் இருக்கும்.
- முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியை மையமாகக் கொண்ட உள்நீள்வட்டம் ”நடுப்புள்ளி நீள்வட்டம்” என அழைக்கப்படும். ஒரு முக்கோணத்தின் உள்நீள்வட்டங்களிலேயே அதிகவளவு பரப்பளவு கொண்ட இந்த நீள்வட்டம் ஸ்டெயினர் உள்நீள்வட்டம் அழைக்கப்படுகிறது.[3]:p.145
உள்நீள்வட்ட மையத்தின் ஈர்ப்புமைய ஆயதொலைவுகள் எனில்[3]:p.143:

- உள்நீள்வட்டமானது முக்கோணத்தின் பக்கங்களைத் தொடும்புள்ளிகளையும் அந்தந்த புள்ளிகளுக்கான முக்கோணத்தின் எதிர் உச்சிகளையும் இணைக்கும் கோடுகள் ஒருபுள்ளியில் சந்திக்கின்றன.[3]:p.148
நாற்கரங்களில்
ஒரு நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மீது அந்நாற்கரத்தின் உள்நீள்வட்டங்களின் மையங்கள் அமைகின்றன.[3]:p.136
எடுத்துக்காட்டுகள்
- சுற்றுக்கூம்புவெட்டுகள்
- உட்கூம்புவெட்டுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்