சுலில் குமார்
சுலில் குமார் (Sulile Kumar), தருண் குமார், தருண் சத்ரியா என்றும் அழைக்கப் படுகிறார்) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற் பெயர் ஆகும். இவர் தருண் கோபியின் காளை (2008) திரைப்படத்தில் துணை வேடத்தில் நடிகராக அறிமுகமானார், பின்னர் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009), ஆண்மை தவறேல் (2011) ஆகிய படங்களில் எதிர்மறை பாத்திரங்களிலும் படம் பார்த்து கதை சொல் (2012) படத்தில் முன்னணி பாத்திரத்திலும் நடித்தார். நகரம் (2010), மார்க்கண்டேயன் (2011), முப்பொழுதும் உன் கற்பணைகல் (2012) போன்ற பலவற்றில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார், காதல் அதிரடி நாடகமான படம் பார்த்து கதை சொல் (2012) இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் குறைந்த அளவு திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது. தொழில்குமார் தருண் கோபியின் காளை (2008) திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமானார், இயக்குநர் தருண் கோபி இவருக்கு தருண் சத்ரியா என்ற புதிய பெயரைக் கொடுத்தார். பின்னர் இவர் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009), நகரம் (2010) (2010), மார்கண்டேயன் (2011) ஆகிய படங்களாக தொடர்ந்து எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார். பின்னர் காதல் நகைச்சுவை படமான படம் பார்த்து காதல் சொல் (2012), வெளியாகாத துப்பறியும் பரபரப்பூட்டும் திரைப்படமான கண்டுபிடி கண்டுபிடி ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 2015 ஆம் ஆண்டில் சுலீ குமார் கன்னடத் திரைப்படமான மாரிகொண்டாவரு படத்தின் வழியாக அறிமுகமானார். அதில் கன்னடத்தில் விருது பெற்ற புதின எழுத்தாளரான தேவானுரா மகாதேவா கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் இவர் ஒரு வரலாற்று நாடகப்படமான களத்தூர் கிராமம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டில், குமார் தி ப்ரோக்கன் டைட் என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி, நடித்தார், இது சிக்கலான உறவுகளைப் பற்றிய கதை ஆகும். 2017 ஆம் ஆண்டில், குமார் தனது இயற்பெயரான சுலில் குமார் என்ற பெயரையே பயன்படுத்தத் தொடங்கினார்.[3] திகில் திரைப் படமான டோரா, அமீரின் வரலாற்று நாடகப்படமான சந்தனத் தேவன் ஆகியவற்றில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார்.[4] திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia