சூறாவளி ஃவீலிக்ஸ் (2007)
சூறாவளி ஃவீலிக்ஸ் 2007 அத்திலாந்திக் சூறாவளி பருவத்தின் 6வது பெயரிடப்பட்ட புயலும், இரண்டாவது சூறாவளியும் இரண்டாவது தரம் 5 இலான சூறாவளியுமாகும். ஆகஸ்டு 31 அன்று அயன மண்டல அலையில் இருந்து தோன்றி செப்டம்பர் 1 இல் காற்றுமுகத்தீவுகளை கடந்துச் சென்று பின்னர் சூறாவளியாக செறிவானது. செப்டம்பர் 2 அன்று விரைவாக மிகவிரைவாக முக்கிய சூறாவளியாக செறிவாகி செப்டம்பர் 3 இல் தரம் 5 இலான சூறாவளியாக தரமுயர்ந்தது. செப்டம்பர் 3 2100 UTCக்கு ஃவீலிக்ஸ் தரம் 4 ஆக தரமிரங்கினாலும் செப்டம்பர் 4 1040 UTCக்கு மீண்டு தரம் 5 இலான சூறாவளியாக செறிவானது. ஃவீலிக்ஸ் நிக்கராகுவா ஒண்டூராஸ் எல்லைக்கு சற்று தெற்கில் மொசிகீடோ கோஸ்ட் பகுதியில் தரைத் தட்டியது. ஃவீலிக்ஸ் காரணமாக ஆகக் குறைந்தது 67 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. புயலின் வரலாறுஆகஸ்டு 24 இல் ஆபிரிக்காவின் மேற்கு கரையில் இருந்து அயன் மண்டல் அலை ஒன்று மேற்குத் திசையாக 14 mph (23 km/h) வேகத்தில் தலைகீழான V வளைவுடன் நகர்ந்தது.[1] ஆரம்பத்தில் செயற்கை கோள்களினால் உணர முடியாத,[2] அலை முகடு ஈரமான காலநிலைக் காரணமாகவும் [3] பரவலான இடி மழைக் காரணாமாகக் கண்டறியப்பட்டது. ஆகஸ்டு 25 இல் செயற்கைக் கோள் படங்கள் அயன இடை கலப்பு வலயத்துக்கு சற்று வடக்கில் சுழல் காற்றுகளை காட்டியது.[4] அலை மத்திம மற்றும் செறிவான வெப்பச் சலனக் காற்றுகளை ஏற்படுத்திவந்த்தோடு, ஆகஸ்டு 27 இல் 1012 mbar அளவான தாழ் அமுக்கம் கேப் வேர்டேக்கு 830 மைல் (1,340 கி.மீ.) மேற்கு-தென்மேற்குத் திசையில் அவதானிக்கப்பட்டது.[5] அடுத்த சில நாட்களுக்கு தொகுதி எதுவித வளர்ச்சியையும் காட்டவில்லை;[6] ஆனாலும், ஆகஸ்டு 30 இல் சுழல்காற்றுகளுடன் தாழ் அமுக்கமாக மாறுவதற்கான ஆயத்தங்களைக் காட்டியது.[7] சுழற்சி அடுத்த நாள் அதிகரித்துக் காணப்பட்டது,[8] சூறாவளி அவதானிப்பு விமானம் ஒன்று குறை நிலை சுழற்சி காணப்படுவதை அவதானித்தது. அதன் பிறகு ஆகஸ்டு 31, 2100 UTCக்கு அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் அயன மண்டல தாழ் அமுக்கம்-6 தொடர்பான எச்சரிக்கைகள வழங்க ஆரம்பித்தது. இதன் போது தாழ் அமுக்கம் காற்றுமுகத்தீவுகளுக்கு 180 மைல் (295 km) கிழக்கு-தென்கிழக்குத் திசையில் காணப்பட்டது.[9] அயன மண்டல சுழல் காற்றாக செறிவடைகையில் தாழ் அமுக்கம், வடக்கே காணப்பட்ட பலமான உயரமுக்கம் காரணமாக மேற்கு-வடமேற்குத் திசையில் நகரத்தொடங்கியது. தொகுதி வளைவான மழைப்பட்டைகளையும் அதிகரிக்கும் வெளியோட்டத்தையும் சிறிய காற்று shear ஐயும் கொண்டிருந்த்தோடு, வெப்பமான நீரின் மேலாக நகர்ந்தமை புயலின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்து.[9] அதன் ஆலமான வெப்பச் சலனங்கள் அதன் மையத்துக்கு அணமையில் அமைந்திருந்தன. கிரெனடாத் தீவைக் கடந்தப் பின்னர் செப்டம்பர் 1, 0900 UTCக்கு அயனமண்டல புயாலாக செறிவடைந்து அயனமண்டல புயல் ஃவீலிக்ஸ் என்ற பெயரைப் பெற்றது.[10] ஃவீலிக்ஸ் விரைவாக செறிவடைந்து வெப்பச் சலனங்கலையுடைய மையக் கருவையும் அதனைச் சூழ பிணையப்பட்ட பட்டைகளையும் கொண்டது.[11] செப்டம்பர் 1 அன்று எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களில் புயலின் கண் தென்பட்டது.[12] சூறாவளி அவதானிப்பு விமானத்திலிருந்துப் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அமெரிக்க சூறாவளி அவதான நிலையம், புலானது செப்டம்பர் 2 இல் பொனெய்ரேக்கு கிழக்கு-வடகிழக்குத் திசையில் 155 மைல் (250 km) தொலைவில் அமைந்திருந்தப் போது சூறாவளி தரத்தை எட்டியதாக மதிப்பிட்டது.[13] ![]() குறைந்த காற்றழுத்தம் உள்ளதும் உயர் வெப்பக் கொள்லளவை கொண்டதுமானப் பகுதியூடாக நகர்ந்ததன் மூலம் சூறாவளி ஃவீலிக்ஸ் விரைவாக நன்கு வரையறுக்கப்பட்ட கண்ணையும் சமச்சீரான முகில் அமைப்பையும், செறிவான மேல் வெளியோட்டத்தையும் கொண்டது.[14] ஃவீலிக்ஸ் செப்டம்பர் 2 1800 UTCக்கு யமேக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு தென் கிழக்கில் 490 மைல் (790 km) தொலைவில் அமைந்திருந்தப் போது முக்கிய சூறாவளியாக தரமுயர்ந்தது.[15] விரைவான செறிவாக்கம் தொடர்ந்து, அதே நாளில் சூறாவளி சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தலிள் தரம் 4ஐ எய்தியது. ஆக குறைவான அமுக்கம் 957 mbar அளவுக்கு குறந்த்து இது மணிக்கு 3.4 mbar என்ற வீதத்திலான குறைவாகும். அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் இந்த அமுக்க குறைவினை தாம் அவதானித்த வேகமான அமுக்க குறைவுகளில் ஒன்றாக குறிப்பிட்டது. சூறாவளி ஆர்வளர்களின் விமானமொன்று சூறாவளியின் கண் 14 miles (22 km) ஆக குறைந்திருப்பதைக் அவதானித்தது.[16] அடுத்த சூறாவளி ஆர்வளர்களின் விமானம் 175 mph (280 km/h) வேகமான காற்றுகளையும், 163 mph (263 km/h) வேகமான மேற்பரப்பு காற்றுகளையும் கண்சுவரின் தென்மேற்குப் பகுதியில் அவதானித்தது;189 mph (306 km/h) வேகமான மேற்பரப்புக் காற்றுகள் கண்சுவரின் வடகிழக்குப் பகுதியில் அவதானிக்கப்பட்டன. இருப்பினும் அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் இவ்வாசிப்புகள் முகில்களில் காணப்பட்ட பணித்துளிகள் காரணமாக ஏற்க முடியாதவை என் முடிவு செய்தது. அவதானிப்புகளில் இருந்து ஃவீலிக்ஸ் செப்டம்பர் 3 0000 UTCக்கு யமேக்காவின் கிங்ஸ்டன் நகருக்கு தென் கிழக்கில் 90 miles (625 km) தொலைவில் அமைந்திருந்தப் போது 165 mph (265 km/h) வேகமான காற்றுகளை கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டது. இதன் படி ஃவீலிக்ஸ் சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தலிள் தரம் 5ஐ எய்திய சூறாவளியாக மாறியது. சூறாவளியை அவதானிக்கச் சென்ற சூறாவளி ஆர்வளர்களின் விமானம் ஆபத்தான பனித்துளிகளையும் சுழிகளையும் முகில்களில் எதிர் நோக்கியமையால் அவதானிப்புகள் கைவிடப்பட்டன.[17] விரைவாக மேற்கு நோக்கி நகர்ந்த ஃவீலிக்சின் கண் 12 மைல் (19 km) ஆக குறைந்தது. அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் ஃவீலிக்ஸ் தரம் 5இலான சூறாவளியாக மாறி 9 மணி நேரத்தில் ஆகக் குறைந்த அமுக்கமான 929 mbar அடைந்ததாக கணக்கிட்டது. முதலில் ஃவீலிக்ஸ் மேற்கு- வடமேற்காக நகரும் என முன்னறிவிக்கப்பட்டது.[18] இருப்பினும் அதன் பாதை மேற்குத் திசையாகவே காணப்பட்டது. சூறாவளியின் மேற்பரப்பில் காணப்பட்ட முகிழ்கள் வெப்பமடைந்து கண் மறையத் தொடங்கியது.[19] செப்டம்பர் 3 1800 UTCக்கு ஃவீலிக்ஸ் 145 mph (235 km/h) வேகமான காற்றுக்களை கொண்ட நிலையில் தரம் 4 ஆக வீக்கமடைந்தது.[20] செப்டம்பர் 4இல் ஃவீலிக்ஸ் கண்சுவர் பரிமாற்ற வட்டத்தை முடித்த நிலையில் மீண்டும் செறிவடைய தொடங்கியது,[21] ஃவீலிக்ஸ் அதே நாள் 1040 UTCக்கு மீண்டும் தரம் 5இலான சூறாவளியாக மாறியது.[22] இந்நிலையில் 160 mph (260 km/h) வேகமான காற்றுகளுடன் ஃவீலிக்ஸ் நிக்கராகுவாவின் வடகிழக்குப் பகுதியில் தரைத்தட்டியது.[23] தரைத் தட்டி 9 மணித்தியாளங்களுக்குப் பின்பும் தொகுதி நல்ல முகிலமைப்பைக் கொண்டிருந்த்தது. எனினும் காற்றின் வேகம் விரைவாக குறைய தொடங்கியது.[24] செப்டம்பர் 5 காலையில் ஃவீலிக்ஸ் அயன மண்டல புயலாக வீக்கமடைந்தது.[25] தொகுதி அயன மண்டல் தாழ் அமுக்கமாக விக்கமடைந்த நிலையில் தெற்கு ஒண்டூராசுக்கு நகர்ந்தது. செப்டம்பர் 5 0900 UTCக்கு அமெரிக்க சூறாவளி அவதான நிலையம் ஃவ்விலிக்ஸ் தொடர்பான தனது கடைசி அறிவிப்பில் தொகுதியானது ஒண்டூராசுக்கு மேலாக பரந்த தாழ் அமுக்க வலயமாக வீக்கமடைந்ததாக அறிவித்தது.[26] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia