சென்னை சிறுத்தைகள்
சென்னை சிறுத்தைகள் (Chennai Cheetahs) இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த உலக வளைதடிப் பந்தாட்டத் தொடர் விளையாடும் வளைதடிப் பந்தாட்ட அணியாகும். இது சென்னை ஸ்போர்ட்ஸ் ஆர்கனைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் (சிஎஸ்ஓ) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான ஆணியாகும், ஆஸ்திரேலியரான பிரெண்ட் லிவர்மோர் தலைமையில் ஸ்பானியரான ஜோஸ் பிராசாவால் பயிற்றுவிக்கப்பட்டது. அணியின் சொந்த மைதானம் என்பது சென்னையில் மாநகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் மைதானமாகும் . உரிமையாளர்சென்னை விளையாட்டு அமைப்பாளர்களின் (CSO) குழுவினருக்கு சொந்தமானது, ஜூபிளி கிரானைட் உரிமையாளரான எல். டி. நன்வானி என்பவர் இதன் தலைவராக உள்ளார். அணியின் ஒப்பந்த நிதி விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், அணியின் உரிமைக்காக அவர்கள் முதலீடு செய்யப்பட்டத் தொகை 15 ஆண்டுகளுக்கு இந்திய ரூபாயில் 120-140 மில்லியன் எனத் தரவுகளின் அடிப்படையில் தெரிகிறது.[1][2] அணித்தலைவர்ஆஸ்திரேலியரான பிரெண்ட் லிவர்மோர் 2004 ஒலிம்பிக் போட்டியில் குராபுராஸ் உடன் தங்கப் பதக்கத்தை வென்றார், ஆனால் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இவரது அணிமூன்றவது இடத்திற்கே வரமுடிந்தது.[3] நிம்பஸ் ஸ்போர்ட் உடன் இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரில் பிரெண்ட் லிவர்மோர் சென்னை சிறுத்தை அணியின் தலைவரானார்.[4] அணியின் பயிற்சியாளர்ஜோஸ் பிராசா ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட பயிற்சியாளர் ஆவார்.[5] இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணிக்கு 2009 களில் பயிற்சியாளாராக இருந்துள்ளார்.[6] 2010இல் குவாங்சௌவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பயிற்சியாளாராக இருந்துள்ளார்.[7] அணி கீதம்இந்த அணியின் பாடலுக்கு தமிழ்ப் பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளராக இருந்தார். பாடல் இசைக்கு கிருஷ்ணா சேத்தன் மற்றும் கவிய வர்மன் ஆகியோர் எழுதியிருந்தனர். சுசித் சுரேஸன், ஆனந்த அரவிந்தாக்சன் மற்றும் நிவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.[8] குழு அமைப்புஆஸ்திரேலிய நடுநிலை வீரர் பிரெண்ட் லிவர்மோர் தலைமையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜோஸ் பிராசா பயிற்சியாளராக இந்த அணி நிர்வகிக்கப்படுகிறது.
செயல்திறன்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia