செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006, மார்ச்சு முதல் 2008, மே 18-தேதி வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre of Excellence for Classical Tamil - CECT) என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. [1]அதன் பின்னர், இந்நிறுவனம் 2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவருகிறது.[2] [3] இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொ.ஊ. 600-இக்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஜனவரி 21 2009 அன்று தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10-இன் கீழ் (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27) பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு, தலைவர், துணைத்தலைவர், செயலர், அலுவல்சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி நிறுவனமாகும். வளாகம்2007ல் மாநில அரசாங்கம் சென்னையின் தெற்குப் பகுதியான பெரும்பாக்கத்தில் ஒரு நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிற்கு வழங்கியது. மைசூரில் செயல்பட்டு வந்த செம்மொழி ஆய்வு நிறுவனமானது மே 2012 முதல், CICT தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் வளாகத்தில் மாற்றப்பட்டது. பெரும்பாக்கத்திலுள்ள இடத்தில் சொந்தமாக அலுவலக கட்டிடம் கட்ட 2017 ஆம் ஆண்டில் ₹ 246.547 மில்லியன் நிதியை மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டது.[4] 2022ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி பெரும்பாக்கத்தில் CICTயின் சொந்தக் கட்டிடத்தினை நாட்டிற்கு அர்பணித்தார்.[5][6] 16.86 ஏக்கர் நிலப்பரப்பில் ₹ 246.5 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த நான்கு மாடிக் கட்டிடம் மொத்தம் 70,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் தரை தளத்தில் ஒரு நூலகம் மற்றும் மாநாட்டு அரங்குகள், முதல் தளத்தில் இயக்குநர் அலுவலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள், இரண்டாவது தளத்தில் கல்வி ஊழியர்களின் அலுவலகங்கள் மற்றும் மூன்றாவது மாடியில் மல்டிமீடியா மையம் உள்ளன. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, CICT 22 கல்வி ஊழியர்களையும் 23 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டுள்ளது. உயர்நிலைக் குழுகல்வி அமைச்சக நிறுவனத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த ஐம்பெருங்குழு, எண்பேராயம் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. தலைவர்தமிழக முதலமைச்சராக இருப்பவர்களே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கின்றனர். செயலர்
அலுவல் சார் உறுப்பினர்கள்
திட்டங்களும் செயற்பாடுகளும்தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
-இவை போன்று இன்னும் பல செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவ்வியல் நூல்கள்செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. பத்து முதன்மைத் திட்டப் பணிகள்செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புதொன்மைக்காலம் முதல் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும், மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரை மேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல். பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளும் மேற்கொள்ளப் பெறும். 22 டிசம்பர் 2021 அன்று புது தில்லியில் தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பும் மற்றும் தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.[7] வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் இலக்கண ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கென இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மொழிநடை கருத்தில் கொள்ளப்படும். தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வுபண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நிகழ்த்தப் பெறும். தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும். தமிழும் பிற மொழிகளும்தமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்தல். பழந்தமிழ் ஆய்விற்கான மின் நூலகம்அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக் கொள்ள மின் நூலகம் வடிவமைக்கப்படுகிறது. இணையவழிச் செம்மொழியைக் கற்பித்தல்உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணைய வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது. பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற்பொருட்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்படும். இந்நூற்கலைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும். பழந்தமிழ்க் குறுங்காட்சிப் படங்கள்தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன. நூலகம்செம்மொழி நூலகத்தில் 40, 000 அரிய நூல்களும், பழந்தமிழ் ஆய்வுக்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும், ஓலைச்சுவடிகளும், இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. உதவித் தொகைகள்முனைவர் பட்ட ஆய்வு உதவித் தொகைசெம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ₹12,000/-(பன்னிரண்டாயிரம்) இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ₹ 12,000/-(பன்னிரண்டு ஆயிரம்) வழங்குகிறது. முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகைமுனைவர் பட்டம் பெற்ற பின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ₹18 ஆயிரத்தை வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ₹30 ஆயிரம் வழங்குகிறது. குறுகிய காலத் திட்டப் பணிகள்பழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது. செம்மொழித் தமிழ் விருதுகள்இந்த மையத்தின் வழியாகச் செம்மொழித் தமிழில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குத் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன.[8] தொல்காப்பியர் விருதுதமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் ₹5 இலட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய “தொல்காப்பியர் விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை இந்தியர் ஒருவருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. குறள் பீடம் விருதுதமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் ₹5 இலட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய “குறள்பீடம் விருது”கள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு இருவருக்கு அளிக்கப்படும். இளம் ஆய்வாளர் விருதுதமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30 - 40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும் நினைவுப் பரிசும் ₹1 இலட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய “இளம் அறிஞருக்கான விருது”கள் ஒவ்வோராண்டும் ஐந்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுமுன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை நிறுவனத்தில் நிறுவியுள்ளார். அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ₹10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது.[9] வெளியீடுகள்
ஆதாரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia