செலீனியம் டெட்ராபுரோமைடு
செலீனியம் டெட்ராபுரோமைடு (Selenium tetrabromide) என்பது SeBr4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்புதனிம புரோமின் மற்றும் செலீனியம் ஆகியவற்றை வினைபுரியச் செய்து செலினியம் டெட்ராபுரோமைடு தயாரிக்கலாம்:[1][2]
பண்புகள்கருப்பு நிறம் கொண்ட முக்கோண வடிவ α-SeBr4 செலீனியம் டெட்ராபுரோமைடு மற்றும் ஒற்றைச்சரிவு படிக அமைப்பிலான ஆரஞ்சு-சிவப்பு நிற β-SeBr4 செலீனியம் டெட்ராபுரோமைடு என்ற இரண்டு உருவங்களில் உள்ளது. இவை இரண்டும் நாற்பகுதிகளையுடைய கியூபேன் போன்ற Se4Br16 அலகுகளைக் கொண்டுள்ளன ஆனால் இவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதில் வேறுபடுகின்றன. [3] கார்பன் டைசல்பைடு, குளோரோபார்ம் மற்றும் எத்தில் புரோமைடு ஆகிய கரைப்பான்களில் செலீனியம் டெட்ராபுரோமைடு கரைகிறது. ஆனால் தண்ணீரில் இச்சேர்மம் சிதைவடைகிறது.[4] அதனால் ஈரமான காற்றில் செலினசு அமிலத்தை உருவாக்குகிறது. செலீனியம் டெட்ராபுரோமைடு புரோமின்-நிறைவுற்ற வளிமண்டலத்தின் கீழ் மட்டுமே நிலைப்புத் தன்மை கொண்டுள்ளது. வாயு அடர்த்திக்கான வாயு கட்ட அளவீடுகள் சேர்மம் செலீனியம் மோனோபுரோமைடு மற்றும் புரோமின் வாயுக்களாகச் சிதைவதைக் குறிக்கிறது.[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia