செலீனியம் இருசல்பைடு
செலீனியம் இருசல்பைடு (Selenium disulfide) என்பது SeS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதிச் சேர்மமாகும். கந்தகம், செலீனியம் இரண்டு தனிமங்களும் சங்கிலி மற்றும் வளையமாதலில் பெரிதும் பங்கேற்கின்றன. இதனால் இவ்விரண்டு தனிமங்கள் இணைந்து உருவாகும் பல்வேறு கலப்புலோகங்கள்[1] அறியப்படுகின்றன. செலீனியம் இருசல்பைடு, கந்தக ஈராக்சைடிற்கு ஒத்தவரிசைச் சேர்மம் அல்ல. மருத்துவத்தில் செலீனியம் இருசல்பைடுமுடிக்கழுவிகளில் பூஞ்சையெதிர்ப்பியாக செலீனியம் இருசல்பைடு சேர்க்கப்பட்டு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. உச்சந்தலையில் பொடுகு மற்றும் தோலுமியாக்கி பூஞ்சையுடன் ஊறல் தோலழற்சி போன்றவற்றுக்கான சிகிச்சையில் செலினியம் இருசல்பைடு பயன்படுகிறது.[2][3][4] அமெரிக்காவில் 1% செறிவு மற்றும் 2.5% செறிவுகளில் செலீனியம் இருசல்பைடு கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மருத்துவர்களின் பரிந்துரைக்கு மட்டும் விற்கப்படும் 2.5% செலினியம் இருசல்பைடு உடலில் காணப்படும் ஒரு வகை பூஞ்சை நோயான தோல்படைக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. வேதியியல் உள்ளமைப்பு![]() செலீனியம் இருசல்பைடு தோராயமான SeS2 அமைப்பைக் கொண்டிருப்பதால் இது சில நேரங்களில் செலீனியம் சல்பைடு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முழுமையான வேதிச் சேர்மம் என்ற பகுப்புக்கு உட்படாததால் இதை விற்பனைக்காத் தயாரிக்கப்படும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். 1:2. விகிதத்தில் செலீனியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் இணைந்து சங்கிலிவளையக் கலவைகள் உருவாகின்றன. இவ்வளையக் கலவைகளில் செலீனியமும் கந்தகமும் SenS8−n. என்ற பொது வாய்ப்பாட்டின் அடிப்படையில் வளையங்களில் இடம்பெறுகின்றன. முடியின் நிறம் மாற்றவும் முடிச்சாயங்களின் நிறத்தை மாற்றவும் செலீனியம் இருசல்பைடு பெரிதும் உதவுகிறது. உலோக அணிகலன்கள் தொழிலிலும் நிறம் மாற்றும் செயல்களுக்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். பிற செலீனியம சல்பைடுகள்பல செலீனியம் சல்பைடுகள் அறியப்படுகின்றன. அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் (NMR) சோதனைகளில் 77Se பயன்படுத்தப்படுகிறது. சால்கோசென்களின் வளைய உள்ளிடை மாற்றத்திலும் இவை பயன்படுகின்றன.[5]. செலீனியம் ஒருசல்பைடு (SeS) மட்டுமே விலங்குகளில் புற்றுநோய் உண்டாக்கும் ஊக்கியாகச் செயல்படும் செலீனியம் சேர்மம் என அறியப்படுகிறது[6]. கடந்த காலத்தில் செலீனியம் ஒருசல்பைடுடன் தனிமநிலை செலீனியம் மற்றும் கந்தகம் பயன்படுத்தப்பட்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டதால்[7] மருந்துகளின் சரியான உட்பொதிவு வடிவம்[8] அறிதலில் குழப்பமே நிலவுகிறது[9]. மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia