சேனைத்தலைவர் அல்லது இலை வாணியர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மத்திய மற்றும் தென் தமிழகத்தில் அதிகளவில் வசிக்கின்றனர்.[1]
சேனைத்தலைவர் வணிகர்கள் அக்காலத்தில் செட்டியார் என்றே அழைக்கப்பட்டனர். தரங்கம்பாடி ஓலை ஆவணங்களில் இருந்து ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைக்குடையார்) இனத்தவராவார். வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள், சேனையங்காடியார் என்றும் சேனைக் குடியுடையார் அல்லது சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.[2]
சங்க காலங்களில் இருந்து இவ்வினத்தின் பெயர்கள் "சேனை" என்ற அடைமொழியுடன் அவர்கள் அக்காலங்களில் செய்யும் தொழிலுக்கு ஏற்ப சேனைக்கடையார், மூன்று கைமா சேனையார் , சேனையார், சேனை பெரு வாணிகன், சேனைக் குடியன், சேனை கொண்ட செட்டியார், சேனை அங்காடிகள், சேனைக்குடையார், இலைவாணியர், சேனைத்தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.[3][4][5][6]
படைத்தலைவர்களாகவும், வணிகர்களின் பாதுகாவலர்களாகவும், கோயில்களின் பாதுகாவலர்களாகவும், அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாகவும், சேனை வீரர்களாகவும், வணிகர்களாகவும், கொடிக்கால் சாகுபடி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளதால் "சேனை" என்ற அடைமொழியை சங்க காலத்தில் இருந்து தங்கள் இனத்தின் அடையாளமாக சேர்த்து கொண்டு, "சேனை" என்ற அடைமொழியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.[7][8]
இலைவாணிய பட்டம் (வெற்றிலை வேளாண்மை செய்த சேனையார் அல்லது சேனையங்காடிகள் என்ற இன மக்களுக்கு மட்டும் சோழர், பாண்டிய காலங்களில் உள்ள வரியின் பெயர்)[13][14]
பட்டங்கள்
சேனைத்தலைவர் இன பட்டங்கள்:
மூப்பனார்
பிள்ளை
முதலியார்
செட்டியார்
கொடிக்கால் மூப்பனார்
இலைவாணியர்
இலைவாணியர்
இலைவாணிய சமூகம் ஒன்றுபட்ட வாணியர் சமூகத்தின் உட்பிரிவாக கருதப்படுகிறது. இவர்கள் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்து, அதனை வணிகம் செய்வதை குலதொழிலாக கொண்டவர்கள். இவர்கள் பிற்காலத்தில் தங்கள் பெயரை சேனைத்தலைவர் என்று மாற்றிக்கொண்டதாக கருதப்படுகிறது.[15][9]