சைபீர் கானரசுசைபீர் கானரசு அல்லது வரலாற்றுரீதியாக துரன் கானரசு[1][2] என்பது துருக்கிய-மங்கோலிய ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்பட்ட தென்மேற்கு சைபீரியாவில் இருந்த ஒரு துருக்கிய கானரசு ஆகும். இந்த கானரசின் வரலாறு முழுவதும் சய்பனிட் மற்றும் தைபுகிட் அரசமரபுகளின் உறுப்பினர்கள் இந்த கானரசின் ஆளும் வர்க்கத்தினராவதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இந்த இரண்டு பழங்குடி இனங்கள் செங்கிஸ்கானின் மூத்தமகன் சூச்சியின் ஐந்தாவது மகன் சய்பனின் (ஷிபன்)[சான்று தேவை] வழிவந்த செங்கிஸ்கானை நேரடி தந்தை வழி முன்னோராகக் கொண்ட செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் ஆவர். இந்த கானரசு அமைந்திருந்த இடமும் ஒரு காலத்தில் மங்கோலியப் பேரரசின் பகுதியாக இருந்தது. பிற்காலத்தில் இந்த கானரசு அமைந்திருந்த இடம் வெள்ளை நாடோடிக் கூட்டம் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆட்சியின்கீழ் வந்தது. சைபீர் கானரசானது இனரீதியாக பல்வேறுபட்ட துருக்கிய சைபீரிய தாதர்கள், பஷ்கிர்கள் மற்றும் கன்டி, மன்சி மற்றும் செல்கப் உள்ளிட்ட பல்வேறு உரல் மொழிகளை பேசிய மக்களை ஆண்டது. பதிவிடப்பட்ட வரலாற்றிலேயே தொலைதூர வடக்கிலிருந்த முஸ்லிம் அரசு இந்த சைபீர் கானரசு தான். 1582 இல் எர்மக் டிமோஃபெயேவிச் இந்த கானரசை தோற்கடித்தது உருசியாவின் சைபீரியா படையெடுப்புகளின் தொடக்கத்தை குறிப்பதாக உள்ளது. கலாச்சாரம்சைபீர் கானரசின் அங்கீகரிக்கப்பட்ட மதம் என்று இஸ்லாம் கூறப்படுகிறது; தியூமன் மற்றும் சைபீர் ஆகிய நகரங்களில் ஆட்சி செய்த கான்களின் மதமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது. பெரிய மசூதிகள், அரண்மனைகள் மற்றும் மதில் சுவர்கள் கொண்ட கோட்டைகள் தியூமன் மற்றும் சைபீர் ஆகிய இரு நகரங்களில் கட்டப்பட்டன[யாரால்?]. சைபீர் கானரசின் முன்னணி இமாம்கள் மற்றும் முஃப்திக்கள்[யாரால்?] அண்டைய பகுதிகளான கசான் மற்றும் ஏன் சமர்கண்டில் கூட செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். சைபீர் கானரசு தான் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிலேயே அதிக வடக்கில் இருந்த முஸ்லிம் அரசு ஆகும்; அதன் பகுதிகள் ஆர்க்டிக் பெருங்கடலின் கடற்கரையின் பகுதிகளை கூட உள்ளடக்கியிருந்தது.[3] வரலாறு![]() சைபீர் கானரசு பதினைந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சூச்சி குடும்ப மங்கோலியர்கள் பொதுவாக வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தனர். கான்களின் உண்மையான தலைநகரம் சிம்கி-துரா ஆகும். இந்தக் கானரசின் முதல் கான் தைபுகா ஆவார். இவர் போர்சிசின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்குப் பிறகு இவரது மகன் கோஜா அல்லது ஹோகா ஆட்சிக்கு வந்தார். அவருக்கு பிறகு இவரது பேரன் மர் ஆட்சிக்கு வந்தார். தைபுகாவின் வழித்தோன்றல்கள் கட்டுப்படுத்திய டோபோல் மற்றும் நடு இர்திஸ் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட நிலப் பகுதிகளுக்கு போட்டிக்கு ஆள் இல்லாமலும் இல்லை. சூச்சியின் வழித்தோன்றல்களான சய்பனிட்கள் தொடர்ந்து அப்பகுதியை தங்களுக்கு உரியது என கூறினர். சய்பனிட் குடும்பத்தின் துணை கிளையின் உறுப்பினரான இபக் கான், மரை கொன்று சிம்கி-துராவை கைப்பற்றினார். மரின் பேரனான முகம்மது இர்டிஷின் அருகில் இருந்த கிழக்குப் பகுதிகளுக்கு தப்பி ஓடினார். அண். 1493 இல் ஒரு யுத்தத்தில் இபக்கை கொன்றார். மீண்டும் தைபுகாவின் வழித்தோன்றல்களின் ஆட்சி ஏற்பட்டது. சிம்கி-துராவிலேயே இருப்பதை முகம்மது விரும்பவில்லை. எனவே இர்டிஷ் பகுதியில் ஒரு புதிய தலைநகராக இஸ்கர் (அல்லது சைபீரை) தேர்ந்தெடுத்தார். 1552 இல் நடைபெற்ற கசன் மீதான உருசிய படையெடுப்பு காரணமாக தைபுகாவின் வழி தோன்றிய சிபிரின் கான் எதிகர் மாஸ்கோவுடன் நட்பு ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தார். ஆனால் எதிகர் சய்பனிட் அரசமரபைச் சேர்ந்தவரும் இபக்கின் பேரனும் ஆகிய குச்சுமால் சவால் விடுக்கப்பட்டார். பலவருட சண்டைகளுக்கு (1556–1563) பிறகு கடைசியாக எதிகர் இறந்தார். குச்சும் கான் ஆனார். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia