சோகராபென் சாவ்தாசோகராபென் அக்பர்பாய் சாவ்தா ,இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1923 முதல் 1997 ஆண்டு வரை வாழ்ந்த, காந்திய சமூக சீர்திருத்தவாதியும், மருத்துவச்சியும் சமூக சேவகரும், அரசியல்வாதியுமாவார். இவர், பனசுகந்தா தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைசோகராபென் 2 செப்டம்பர் 1923 அன்று குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள பிரந்திஜ் நகரில் ஜமியத்கான் உம்மர்கான் பதான் மற்றும் பிரந்திஜி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்.[1] பள்ளிப்படிப்பின் பின்பாக தனது செவிலியர் பயிற்சி படிப்பை வர்தாவில் சோகராபென் படித்துள்ளார்.[2] சமூக வாழ்க்கைசெவிலியர் பயிற்சியை முடித்த சோகராபென், குஜராத் வித்யாபீடத்தில் செவிலியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்னர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு பணியாளராக சென்றுள்ளார். காந்தியின் ஆலோசனையின் பேரில், அவரும் அவரது கணவரும் தாழ்த்தப்பட்டவர்களின் சமூக மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சனாலி கிராமத்திற்குச் சென்று, அங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்து குழந்தைகளுக்கு கல்விசாலை வழியாக கற்பித்து வந்துள்ளனர். பனஸ்கந்தா மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அம்மாவட்டத்தின் சமூக நலத் திட்டத்தின் தலைவராகவும் சோகராபென் பணியாற்றியுள்ளார்.[3] 3வது மக்களவைக்கான 1962 இந்தியப் பொதுத் தேர்தலின் போது, சோகராபென் இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில்பனஸ்கந்தாவில் போட்டியிட்டு 1,15,931 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார், ஆனால் இரண்டாவது இடத்தை பிடித்த சுதந்திராக் கட்சியின் வேட்பாளர் வெறும் 60,975 வாக்குகளைளையேப் பெற்றிருந்தார். .[4] அவரும் மைமூனா சுல்தானும் 3 வது மக்களவையில் இடம்பெற்றிருந்த இரு முஸ்லிம் பெண்கள் ஆவார்கள்.[5] தனிப்பட்ட வாழ்க்கைசோகராபென், 1946 ஆம் ஆண்டில், சக காந்தியவாதியான அக்பர்பாய் தலுமியான் சாவ்தாவை குஜராத் வித்யாபீடத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். 1997 ஆம் ஆண்டில் சோகராபென் மரணித்தார். அடுத்த ஆண்டிலேயே, அவரது கணவர் அக்பர்பாயும் மரணித்துள்ளார், மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia