சோடியம் தெலூரைடு
சோடியம் தெலூரைடு (Sodium telluride) என்பது Na2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு வெப்பவியல் ரீதியாக நிலையற்ற அமிலமான ஐதரசன் தெலூரைடின் இணை காரமாகும். ஆனால், பொதுவாக சோடியத்துடன் தெலூரியத்தைச் சேர்த்து குறைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சோடியம் தெலூரைடு காற்றுக்கு மிகவும் உணர்திறன் கொண்டதாக இருப்பதால் கையாள்வதற்கு சவாலான ஒரு வேதிப்பொருளாகும். இச்சேர்மத்தை காற்று முதலில் பாலிதெலூரைடுகளாக ஆக்சிசனேற்றம் செய்யும். அவை Na2Tex (x > 1) என்ற பொதுவாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன. முற்றிலும் தூய்மையானதாக இருக்கும்போது நிறமற்றதாக இருக்கும் சோடியம் தெலூரைடு மாதிரிகள், காற்று ஆக்சிசனேற்றத்தின் விளைவுகளால் பொதுவாக ஊதா அல்லது அடர் சாம்பல் நிறத்தில் தோன்றும். தயாரிப்புபொதுவாக அம்மோனியாவை கரைப்பானாகப் பயன்படுத்தி தயாரிப்பு வினை நடத்தப்படுகிறது.[2] கட்டமைப்புM2X என்ற பொது வாய்ப்பாட்டுடன் தொடர்புடைய பல சேர்மங்களைப் போலவே சோடியம் தெலூரைடும் எதிர் புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறான திண்ம Na2Te சேர்மத்தில் ஒவ்வொரு Te2− அயனியும் எட்டு Na+ அயனிகளால் சூழப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு Na+ அயனியும் நான்கு Te2− அயனிகளால் சூழப்பட்டுள்ளன.[3] பண்புகள்M2X வகையைச் சேர்ந்த எளிய உப்புகள், (இங்கு X என்பது ஒரு ஓற்றை அணு எதிர்மின் அயனியாகும்) பொதுவாக எந்த கரைப்பானிலும் கரையக்கூடியவை அல்ல. ஏனெனில் அவை அதிக படிகக்கூடு ஆற்றலைக் கொண்டுள்ளன. தண்ணீரைச் சேர்க்கும்போதும் அல்லது ஈரமான காற்று கூட அல்லது ஆல்ககால்களுடன் சேர்த்து சூடாக்கும்போது Te2− புரோட்டோனேற்றம் அடைகிறது:
இந்த வினையின் காரணமாக, Na2Te உடன் தொடர்புடைய பல செயல்முறைகள் NaHTe (CAS # 65312-92-7) சேர்மத்தை உள்ளடக்கியிருக்கலாம். இது அதிகம் கரையக்கூடியதாகவும் எளிதிலும் உருவாகிறது. கரிம வேதியியல் பயன்பாடுNa2Te கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறைப்புகளுக்கான வினைபொருளாகவும், கரிமதெலூரியம் சேர்மங்களின் தொகுப்பு வினையில் Te தனிமத்தின் மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[4] இருநாப்தைல்தெலூரைடு தயாரிப்பில் விளக்கப்பட்டுள்ளபடி, அரைல் ஆலைடுகள் ஈரரைல் தெலூரைடுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன:
1,3-டைன்களுடன் Na2Te வினைபுரிந்து தொடர்புடைய தெலூரோபீன்களைக் கொடுக்கிறது. இவை கட்டமைப்பு ரீதியாக தயோபீன்களை ஒத்தவையாகும்.
ஒரு குறைக்கும் முகவராக, Na2Te சேர்மம் நைட்ரோ குழுக்களை அமீன்களாக மாற்றுகிறது. மற்றும் சில C-X பிணைப்புகளையும் பிளக்கும்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia