பொட்டாசியம் தெலூரைடு
பொட்டாசியம் தெலூரைடு (Potassium telluride) என்பது K2Te என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியமும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2] பொட்டாசியம் தெல்லூரைடு வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. உருபீடியம் தெல்லுரைடு மற்றும் சீசியம் தெலூரைடு சேர்மங்கள் போலவே இதையும் விண்வெளியில் புற ஊதாக் கதிர் கண்டறியும் கருவியாகப் பயன்படுத்தலாம். இதன் படிக அமைப்பு மற்ற தெலூரைடுகளைப் போலவே உள்ளது. இவை புளோரைட்டு எதிர்ப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. தயாரிப்புதெலூரியம் உருகும் பொட்டாசியம் சயனைடுடன் உடன் வினைபுரிந்து பொட்டாசியம் தெலூரைடை உற்பத்தி செய்யும். பொதுவாக திரவ அம்மோனியா கரைப்பானில் பொட்டாசியம் மற்றும் தெலூரியம் ஆகியவற்றின் நேரடி வினையிலும் இது தயாரிக்கப்படலாம்.[3]
வினைகள்தண்ணீரில் பொட்டாசியம் தெலூரைடைச் சேர்த்து வடிநீரை காற்றில் வெளிப்படுத்தினால் ஆக்சிசனேற்ற வினையினால் பொட்டாசியம் ஐதராக்சைடும் தனிம நிலை தெலூரியமும் உருவாகின்றன. [3][4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia