தூண்டில் மீன் (Anglerfish) என்பது லோபிபார்ம்சு[1] என்ற வரிசையினைச் சார்ந்த மீன்களாகும். இவை எலும்பு மீன்கள் வகையினைச் சார்ந்தவை. பிறமீன்களை இவற்றின் வேட்டையாடலின் மூலம் கவரும் சிறப்பியல்பு முறையினால் இவை இப்பெயரினைப் பெற்றன. இம்மீன்களின் முன் பகுதியில் தூண்டில் போன்ற மாற்றியமைக்கப்பட்ட ஒளிரும் துடுப்பு கதிர் மற்ற மீன்களை கவர்ந்து வேட்டையாட வழிசெய்கிறது. ஒளி உமிழ்வானது இணைவாழ்வு பாக்டீரியாக்கள் மூலம் வெளியிடப்படுகிறது. இப்பாக்டீரியாக்கள் கடல் நீர்லும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்கின்றன.[2][3]
தூண்டில் மீன்களில் ஆண் மீன்கள், பெண் மீன்களை விட சிறியது. பெண் மீன்கள் தலையில் நீண்ட முன்புறத்தைப் பெற்றுள்ளன. ஆண் மீன்களிடம் இவை காணப்படுவதில்லை. ஆண் மீன்கள் மாபெரும் சோம்பேறிகள். இவை தமது தேவைகளுக்கு பெண்மீன்களையே நம்பி வாழ்கின்றன. துணை ஏதும் கிடைக்கவில்லையெனில், உணவு உண்ணாமலே உயிர் நீக்கும். பெண் துணை கிடைக்கும் போது தனது பற்களை அதன் உடலில் பதிய வைத்து கொண்டு ஒட்டி வாழ்கிறது. பிறகு சிறிது சிறிதாக ஆண் மீனின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண் உடலின் தசையோடு ஆணின் தசை இணைந்து விடுகின்றது. ஆணின் நரம்பு மண்டல உறுப்புகள், உணவு மண்டல உறுப்பகள் அழிந்து மறைகின்றன. இனப்பெருக்க உறுப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒட்டுண்ணியாக பெண்ணோடு சேர்ந்து வாழ்கின்றது. சுவாச்சித்திற்கான பிராணவாயுவினையும் பெண்ணிடமிருந்தேப் பெற்றுக் கொள்கிறது. இனப்பெருக்கமும் நடைபெறுகிறது. தனது முழுத் தேவைகளையும் பெண்களிடமிருந்தேப் பெற்றுக்கொள்கிறது. உணவு உண்பதில் ஆண் தூண்டில் மீன்களைப் போல சோம்பேறி வேறு ஏதும் எதுவுமில்லை.[4][5]
பெண் மீனுடன் இணைந்த ஆண் மீன்
பரிணாமம்
130 முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியசின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரையிலான குறுகிய காலத்தில் தூண்டில் மீன்கள் பல்வகைப்படுத்தப்பட்டதாக இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி மரபணு தொகுதிவரலாற்றுக்குரிய சான்றுகளை தந்தது.[6]
வகைப்பாட்டியல்
பிசுபேசு,[1] நெல்சன்,[7] மற்றும் பீட்ச்[8] தூண்டில் மீன்களின் 18 குடும்பங்களை பட்டியலிடுகின்றனர். ஆனால் ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவலைமைப்பு 16 குடும்பங்களை மட்டுமே பட்டியலிடுகிறது.[9]
பேரின காலவரிசை
புதைபடிவ தூண்டில் மீன் பதிவில் பின்வருமாறு:[10][11][12]
மேற்கோள்கள்
↑ 1.01.1Froese, Rainer, and Daniel Pauly, eds. (2006). "Lophiiformes" in FishBase. February 2006 version.