சோல் (திரைப்படம்)
சோல் (ஆங்கிலம்: Soul) 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க கனவுருப்புனைவு நகைச்சுவை நாடக கணினி இயங்குபடம் ஆகும். பிக்சார் ஆல் தயாரிக்கப்பட்டு, வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தினை பீட் டாக்டர் மற்றும் கெம்ப் பவர்சு இயக்கியுள்ளனர். இத்திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு ஜேமி பாக்சு, டீனா பே, கிரகாம் நோர்டன், ரேச்சல் ஹவுசு, ஆலிசு பிராகா, ரிச்சர்டு அயொகாடே, பிலிசியா ரசாடு, டான்னல் ராவ்லிங்சு, குவெஸ்டுலவ், மற்றும் ஆஞ்செலா பாஸ்செட் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் இலண்டன் திரைப்படத் திருவிழாவுல் அக்டோபர் 11, 2020 அன்று வெளியிடப்பட்டது. முதலில் நவம்பர் 20, 2020 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகவிருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றினால் டிஸ்னி+ தளத்தில் திசம்பர் 25, 2020 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் திரைப்படத்தின் அசைவூட்டம், கதை, குரல் நடிப்பு மற்றும் இசையினை பாராட்டினர், சிறந்த அசல் இசையிற்கான கோல்டன் குளோப் விருது இனை வென்றது. 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் மூன்று விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த அசைவூட்டத் திரைப்படம் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia