ராட்டட்டூயி (திரைப்படம்)
ராட்டட்டூயி (Ratatouille) 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓ'டூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கார்ரெட், வில் அர்நெட், ஜேம்ஸ் ரெமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. இப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ரெமி என்ற ஓர் எலி ஆகும். கௌஸ்டவ் என்ற சமையல் நிபுணரின் “யாரும் சமைக்கலாம்“ என்ற தத்துவத்தால் உந்தப்படும் இந்த எலி சமையல் முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வுத் தொடரில் ரெமி தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரிடுகிறது. ஃபிரான்சு வரும் ரெமியின் வாழ்வும் லிங்குயினி என்ற இளம் பையனின் வாழ்வும் ஒரு போக்கில் பயணிக்கின்றன. அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் சாதனைகளும் பற்றியது மீதக் கதை. விருதுகள்வென்றவை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia