சௌரப் நேத்திரவால்க்கர் Saurabh Netravalkar தனிப்பட்ட தகவல்கள் முழுப்பெயர் சௌரப் நரேசு நேத்திரவால்க்கர் பிறப்பு அக்டோபர் 16, 1991 (1991-10-16 ) (அகவை 33) மும்பை , மகாராட்டிரம் , இந்தியா மட்டையாட்ட நடை வலக்கை பந்துவீச்சு நடை இடக்கை நடுத்தர-வேகம் பங்கு பந்து வீச்சாளர் பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி ஒநாப அறிமுகம் (தொப்பி 20 ) ஏப்பிரல் 27, 2019 எ. பப்புவா நியூ கினி கடைசி ஒநாப சூலை 6, 2023 எ. ஐக்கிய அரபு அமீரகம் ஒநாப சட்டை எண் 20 இ20ப அறிமுகம் (தொப்பி 6 ) மார்ச் 15, 2019 எ. ஐக்கிய அரபு அமீரகம் கடைசி இ20ப சூன் 6, 2024 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி 2023-இன்று வாசிங்டன் பிரீடம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை
ஒ.நா.ப
இ20ப
மு.த
ப.அ
ஆட்டங்கள்
48
29
1
80
ஓட்டங்கள்
139
34
3
237
மட்டையாட்ட சராசரி
9.26
8.50
1.50
7.90
100கள்/50கள்
0/0
0/0
0/0
0/0
அதியுயர் ஓட்டம்
19*
12
3
22
வீசிய பந்துகள்
2,458
603
192
4,163
வீழ்த்தல்கள்
73
29
3
117
பந்துவீச்சு சராசரி
22.27
20.79
25.66
24.84
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள்
2
1
0
2
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
0
0
0
0
சிறந்த பந்துவீச்சு
5/32
5/12
2/42
5/32
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள்
15/–
9/–
1/–
21/–
சௌரப் நரேஷ் நேத்திரவால்க்கர் (Saurabh Naresh Netravalkar , பிறப்பு: அக்டோபர் 16, 1991) என்பவர் இந்தியாவில் பிறந்த ஒரு அமெரிக்கத் துடுப்பாட்ட வீரரும், மென்பொருட் பொறியியலாளரும் ஆவார்.[ 1] இவர் ஐக்கிய அமெரிக்கத் துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார். இடக்கை நடுத்தர-விரைவுப் பந்துவீச்சாளரான இவர் இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணியில் விளையாடினார்.[ 2] இவர் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை மும்பை அணிக்காக 2013–14 ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் 2023 திசம்பர் 22 இல் விளையாடினார்.[ 3] தனது முதலாவது பட்டியல் அ போட்டியை 2014 பெப்ரவரி 27 இல் மும்பை அணிக்காக 2013–14 விஜய் அசாரே கோப்பையில் விளையாடினார்.[ 4]
நேத்திரவால்க்கர் ஆரக்கிள் நிறுவனத்தில், எச்1பி நுழைவிசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறார்.[ 5] [ 6] இவரது லிங்க்டின் தன்விவரத்தின்படி, இவர் தற்போது ஆரக்கிளில் தொழில்நுட்ப ஊழியர்களின் முதன்மை உறுப்பினராக பணியாற்றுகிறார்.[ 7] சௌரப் மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பை உட்படப் பிற உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியபோது, பின்னர் இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் இல்லாததால் அமெரிக்கா சென்றார்.
2024 சூன் 6 அன்று, நேத்திரவால்க்கர் 2024 ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணத்தின் போது சூப்பர் ஓவரை வீசியதன் மூலம் பாக்கித்தானுக்கு எதிரான புகழ்பெற்ற வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.[ 8] அவர் சூப்பர் ஓவரில் 18 ஓட்டங்களை வெற்றிகரமாகப் பாதுகாத்து, போட்டியில் அமெரிக்காவின் இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.[ 9] இந்த வெற்றி இறுதியில் அமெரிக்காவை அவர்களின் குழுவில் அட்டவணையில் முதலிடத்திற்கு உயர்த்தியது.[ 10] [ 11] [ 12]
மேற்கோள்கள்
↑ "Oracle techie, USA cricket star: Saurabh Netravalkar is the envy of many on social media" . India Today (in ஆங்கிலம்). 7 June 2024. Retrieved 7 June 2024 .
↑ "Saurabh Netravalkar" . ESPN Cricinfo . Retrieved 13 January 2018 .
↑ "Group A, Ranji Trophy at Bengaluru, Dec 22-25 2013" . ESPN Cricinfo . Retrieved 13 January 2018 .
↑ "West Zone, Rajkot, Feb 27 2014, Vijay Hazare Trophy" . ESPN Cricinfo . Retrieved 14 November 2020 .
↑ "Saurabh Netravalkar memes are gold: 'Without H-1B Visa, US wouldn't have beaten Pak' " . India Today . June 7, 2024.
↑ "Saurabh Netravalkar memes are gold: 'Without H-1B Visa, US wouldn't have beaten Pak' " . India Today (in ஆங்கிலம்). 2024-06-07. Retrieved 2024-06-08 .
↑ "LinkedIn Profile Of Saurabh Netravalkar, USA's Match-Winner Against Pakistan, Goes Viral | Cricket News" . NDTVSports.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-08 .
↑ "From computers to cricket: how Saurabh Netravalkar coded USA's greatest script" . ESPNcricinfo (in ஆங்கிலம்). 2024-06-07. Retrieved 2024-06-08 .
↑ "T20 World Cup 2024: Fans praise US cricketer Saurabh Netravalkar after stunning victory against Pakistan" . The Indian Express . 2024-06-07. Retrieved 2024-06-08 .
↑ "Malad to Dallas: Saurabh Netravalkar cracks the code" . The Times of India . 2024-06-08. https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-mens-t20-world-cup/malad-to-dallas-saurabh-netravalkar-cracks-the-code/articleshow/110811834.cms .
↑ "Saurabh Netravalkar's Company Oracle Reacts To Employee's T20 World Cup Heroics. It Is Viral | Cricket News" . NDTVSports.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-08 .
↑ "Saurabh Netravalkar: I have got very supportive bosses, allowed to work remotely when playing for USA" . The Times of India . 2024-06-07. https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-mens-t20-world-cup/saurabh-netravalkar-i-have-got-very-supportive-bosses-allowed-to-work-remotely-when-playing-for-usa/articleshow/110804534.cms .
வெளி இணைப்புகள்