ஜங்கமர்![]() ஜங்கம் (Jangam) ஜங்கமர், என்போர் நடமாடித்திரிந்த சைவ மதகுருமார் ஆவார். இவர்கள் சிவனின் சீடர்கள் ஆவர்.[1] லிங்காயத்தர் அல்லது லிங்கம்ககட்டி என்றும் இவர்களை முற்காலத்தில் அழைத்து வந்தனர்சோதிர்லிங்க தலங்களில் இவர்கள் மதகுருவாக செயற்படுகின்றனர். கருநாடகம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் காணப்படுவதுடன், தமிழ் நாட்டின் விருதுநகர், சிவகாசி, திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, தேனி, கிருட்டிணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி சேலம், ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றனர்.[2] ஜங்கம் அல்லது ஜங்கமர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் அல்ல மாறாக சைவத்தை அல்லது வீரசைவத்தை பின்பற்றும் வேறு வேறு சமூக மக்கள் தங்கள் சமூகத்திற்குள்ளேயே குருமார்களை நியமித்து கொள்வர் அவ்வாறு நியமிக்கப்படும் குருமார்கள் ஜங்கம் என்று பொதுவாக அழைக்கப்படுவார்கள். மலா ஜங்கம் மற்றும் பேடா ஜங்கம் / பட்கா ஜங்கம் மக்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாவர்.[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia