ஜாக்லின் விக்டர்
ஜாக்லின் விக்டர் (Jaclyn Victor, பிறப்பு: டிசம்பர் 4 1978), மலேசியாவில் புகழ் பெற்ற பாடகி. மலேசிய ஜாக் என்று அழைக்கப்படும் திரைப்பட நடிகை. Malaysian Idol எனும் தொலைக்காட்சித் தாரகை.[1] அவருடைய குரல் வளத்தின் சிறப்பிற்காக, ஆசிய தேவதை என்றும் புகழப் படுகிறார்.[2] சோனி இசை நிறுவனத்தின் ஒப்பந்தப் பாடகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். பல இனிமையான பாடல்களைப் பாடி ஆசியான், ஆசியத் தாரகை என்று புகழையும் பெற்றவர்.[3] 2011 ஆம் ஆண்டு இவர் அப்பளம் எனும் தமிழ்த் திரைப்படத்தில், நளினி எனும் கதாநாயகி வேடத்தில் நடித்தார். இந்தப் படம் அண்மைய காலங்களில், மலேசியத் தமிழர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் ஆகும்.[4] வரலாறுஜாக்லின் விக்டர் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கெப்போங் புறநகர்ப் பகுதியில் பிறந்தவர். இவருடைய தாயாரின் பெயர் மெகி விக்டர். தந்தையாரின் பெயர் தனராஜ் விக்டர். இந்தத் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் ஜாக்லின். இவருக்கு மூன்று தம்பிகள் உள்ளனர். ஜாக்லினுக்கு ஒன்பது வயதாகும் போது, இவருடைய தந்தை ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அதனால், அவருடைய குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டது. இளம் வயதில் ஆழமான வறுமை. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவரின் தாயார் மெகி விக்டர், ஒரே சமயத்தில் மூன்று வேலைகளைச் செய்தார். முதல் இசைத்தட்டு1996இல் தன்னுடைய உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட ஜாக்லின் விக்டர், கோலாலம்பூரில் இருந்த பொழுதுபோக்கு விடுதிகளில் பாடத் தொடங்கினார். பின்னர், பிரபலமான தங்கும் விடுதிகளில் பாடினார். இவருடைய நண்பரின் உதவியுடன் தன்னுடைய முதல் இசைத் தட்டை வெளியீடு செய்தார். ’கனவு’ எனும் தலைப்பைக் கொண்ட அந்த இசைத்தட்டு, அவர் எதிர்பார்த்தது போல பிரபலம் அடையவில்லை. மலேசியத் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான டிவி.8லும் அந்த இசைத் தட்டை விளம்பரப் படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலேசிய ஆராதனைச் சின்னம்அந்தக் காலகட்டத்தில் Malaysian Idol எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, மலேசியர்களிடையே மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக விளங்கியது. பல்லாயிரம் பேர் கலந்து கொள்ளும் அந்தப் போட்டி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படுபவர், நாட்டின் ஆராதனைச் சின்னமாகக் கருதப் படுவார். அவருக்கு பல்வேறு பரிசுகளும், ஊக்குவிப்பு தொகைகளும் வழங்கப்படும். சோனி இசைத்தட்டு நிறுவனம், அதனுடைய எதிர்கால இசைத்தட்டு வெளியீடுகளுக்கும் அவரை ஒப்பந்தம் செய்து கொள்ளும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி தாயார் மெகி விக்டர், ஜாக்லினுக்கு தூண்டுதல் வழங்கினார். பலவகையான தேர்வு அணுகு முறைகள். பல சோதனைகள் பல வேதனைகள். அனைத்தையும் தாண்டி, இறுதிச் சுற்றுக்கு ஜாக்லின் விக்டர் தேர்வானார். 2004 அக்டோபர் 9ஆம் தேதி மலேசிய ஆராதனைச் சின்னமாகவும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது நிலையில் டினா நாசிர் என்பவர் தேர்வானார். அந்த நிகழ்ச்சிதான் மலேசியாவில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியாகும். முதல் மலேசியப் பெண்’மலேசிய ஐடொல்’ நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியப் பெண். முதல் இந்தியப் பெண். முதல் தமிழ்ப்பெண். மலேசியாவின் 76 விழுக்காட்டு ரசிகர்கள், ஜாக்லின் விக்டருக்கு வாக்களித்து அவரை முதல்நிலைக்கு கொண்டு வந்தனர். அதிகமான வாக்குகள் மலாய், சீன சமூகத்தினரிடம் இருந்து பெறப்பட்டன. ’மலேசிய ஐடொல்’ நிகழ்ச்சிகள் இதுவரை இருமுறைகள் நடைபெற்றுள்ளன. 2006 மார்ச் 12ஆம் தேதி அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மலேசிய இந்தியர்கள் மூவர் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். ஜாக்லினைத் தவிர, அஸ்வின் குமார், திரிசியா பிரிசிலா ஆகிய இருவருமே இறுதிச் சுற்றில் தோல்வி கண்டனர். முதல் சுற்றில் முதலாவதாகத் தேர்வு பெற்றவர் ஜாக்லின் மட்டும்தான். மலேசிய இசை உலகில் அது ஒரு வரலாறு. கண்ணீர் மல்கும் வெற்றியாளர் பாடல்பல்லாயிரம் பேர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சியில், பல இலட்சம் ரசிகர்கள் கைபேசிகளின் வழியாக வாக்களித்தனர். இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ஜாக்லின் விக்டர் Gemilang எனும் வெற்றியாளர்ப் பாடலைக் கண்ணீர் மல்கப் பாடினார். ’கெமிலாங்’ என்றால் மலேசிய மொழியில் வெற்றி என்று பொருள். அந்தப் பாடலைக் கொண்ட இசைத்தட்டு வெளியான ஒரே வாரத்திலேயே விற்று முடிந்தது. மலேசிய இசை உலகில் தங்கத் தகுதி பெற்றது. அதுவும் ஒரு சாதனைதான்.[5] இதைத்தவிர, இவர் முதன்முதலில் வெளியிட்டு அனாதையாகிக் கிடந்த ‘கனவு’ எனும் இசைத்தட்டும் ஒரு சில நாட்களிலேயே விற்று முடிந்தது. அதன் பின்னர், அவருக்கு பல வாய்ப்புகள் மலை மலையாய் வந்து குவிந்தன. மலேசியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்புகளை விடுத்தன. சுனாமி நிதியுதவி இசைவிழாக்கள்இந்தக் காலகட்டத்தில், அதாவது 2004ஆம் ஆண்டு இறுதி வாக்கில், சுனாமி பேரலைகளினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவிகள் செய்ய மலேசியாவில் பல அறநிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு நிதி சேர்க்கும் இசைவிழாக்கள், கலைவிழாக்களும் நடந்தன. அந்த வகையில் ஜாக்லின் விக்டரும் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஊதியம் வாங்காமல் ஊழியம் செய்தார். இதைப் போல பல அறநிறுவனங்களுக்கும் நிதி சேர்ப்பதில் உதவிகள் செய்துள்ளார்.[6] 2005 அக்டோபர் மாதம் 28ஆம் தேதி, சீனா, ஷாங்காய் நகரில் ஆசிய இசைவிழா நடைபெற்றது.[7] அதில் ஆசியாவின் 20 நாடுகளின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். மலேசியாவை ஜாக்லின் விக்டர் பிரதிநிதித்தார். அந்த இசைவிழா ஜாக்லினின் வரலாற்றையே மாற்றி அமைத்தது. அந்த விழாவில் ஜாக்லின் தங்கப்பதக்கம் பெற்றார்.[8] அந்த நிகழ்ச்சியில் அவர் ’கெமிலாங்’ பாடலைப் பாடினார். திரைப்படங்கள்
இசைத் தட்டுகள்
விருதுகள்
சர்ச்சை2007ஆம் ஆண்டு ஜாக்லின் விக்டர், மலேசியாவின் சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள தேவாலயங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆலயங்களில் Harapan Bangsa (தமிழில்: இனத்தின் எதிர்பார்ப்புகள்) எனும் பாடலைப் பாடினார்.[10] அவர் அந்தப் பாடலைப் பாடி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2012இல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தப் பாடல் அங்குள்ள முஸ்லீம் சமூகத்தவரை வேதனைப் படுத்துவது போல அமைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.[11] அதனால், ஜாக்லின் விக்டரையும் அவருடைய பாடல்களையும், மலேசிய முஸ்லீம் மக்கள் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று மலேசியாவில் இருக்கும் ‘பெர்க்காசா’ எனும் அரசு சாரா இயக்கம் அறைகூவல் விடுத்தது.[12] சிறப்புகள்மலேசியத் தொலைக்காட்சி தொடர் நாடகங்களான Fara, Manjalara எனும் மலாய் நாடகங்களுக்கு, ஜாக்லின் விக்டரின் பாடல்கள், தொடக்கக் இசைப் பாடல்களாகப் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாரா தொடருக்கு ஜாக்லின் விக்டரின் Cepat-Cepat எனும் பாடலும், மஞ்சலாரா தொடருக்கு Satu Harapan எனும் பாடலும் தொடக்க இசைப் பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தொடக்க இசைப் பாடல்கள், மலேசியாவில் பல மில்லியன் மலாய், சீன, இந்திய ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. அவை ஒரு தமிழ்ப் பெண் உருவாக்கிப் பாடிய பாடல்களின் இசையில் உருவானவை என்பதின் மூலம் மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கப்படுகின்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜாக்லின் விக்டர்
|
Portal di Ensiklopedia Dunia