ஜாதவ்பூர்
![]() ஜாதவ்பூர் (Jadavpur), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ள தலைநகர் பகுதியான கொல்கத்தா மாநகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஜாதவ்பூர் கொல்கத்தாவிற்கு தென்கிழக்கே (ஜவகர்லால் நேரு சாலை வழியாக) 12.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தா மாநகராட்சியின் வார்டுகள் எண் 92, 93, 96, 98, 99 மற்றும் 102 ஜாதவ்பூர் நகர்புற பகுதியில் உள்ளது. தெற்கு கொல்கத்தா மாநகரத்தில் அமைந்த ஜாதவ்பூர் நகர்புற பகுதியில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்[6], இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்[7], மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்[8] மற்றும் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம்[9] உள்ளது. ஜாதவ்பூரில் இராஜா சுபோத் சந்திர மல்லிக் சாலை மிகவும் பிரபலம். ஜாதவ்பூர் பகுதி, ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கும்; ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.
போக்குவரத்து![]() ஜாதவ்பூர் பகுதியில் ஜாதவ்பூர் தொடருந்து நிலையம் மற்றும் கொல்கத்தா மெட்ரோவின் இரவீந்திர சரோவர் மெட்ரோ நிலையம், மகாநாயக் உத்தம் குமார் மெட்ரோ நிலையம், கவி சுகந்தா மெட்ரோ நிலையம், ஜோதிரிந்திரா நந்தி மெட்ரோ நிலையம் மற்றும் சத்யஜித் ராய் மெட்ரோ நிலையங்கள் உள்ளது. கல்வி & ஆய்வு நிலையங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia