ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
![]() ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (Jadavpur University)[5] இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகரத்திற்குட்பட்ட ஜாதவ்பூர் பகுதியில் இயங்கும் ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[6] 2023ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் 902 ஆசிரியர்களும்; 13,570 மாணவர்களும்[2] இருந்தனர். அவர்களில் இளநிலை மாணவர்கள் 8,148, முதுநிலை மாணவர்கள் 3,134 மற்றும் ஆய்வு மாணவர்கள் 2,888 பேரும் இருந்தனர். இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை கலை, அறிவியல், பொறியல், வணிகம், நிர்வாகப் படிப்புகளும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளது. வளாகங்கள்முதன்மை வளாகம்இதன் முதன்மை வளாகம் ஜாதவ்பூரில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள்து. இங்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகள் செயல்படுகிறது. முதன்மை வளாகத்தில் 7 கூட்டரங்கங்கள் மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் உள்ளது. ![]() 6 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடல்கள் கொண்டுள்ளது. பிற வளாகங்கள்உப்பு நீர் ஏரி வளாகம் - 26 ஏக்கர் கொண்ட இவ்வளாகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் எரிசக்தி பொறியியல் பிரிவுகள் உள்ளது.[7] மேற்கு வளாகம், ஜாதவ்பூர்புதிய நகர வளாகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia