ஜார்கிராம்
ஜார்கிராம் (Jhargram), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]ஜார்கிராம் நகரம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு தென்மேற்கே 172.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும், 14,235 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 61,712 ஆகும். அதில் ஆண்கள் 30,876 மற்றும் பெண்கள் 30,836 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.72% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.53% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.72%, இசுலாமியர் 1.66%, சமணர்கள் 2.53%, கிறித்தவர்கள் 0.75% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[3] கல்வி
போக்குவரத்துஇரயில்ஹவுரா-மும்பையை இணைக்கும் ஆசன்சோல்-டாட்டாநகர்-கரக்பூர் இருப்புப் பாதையில் ஜார்கிராம் தொடருந்து நிலையம் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் ஜார்கிராம் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia