ஜிசாக் பிராந்தியம்ஜிசாக் பிராந்தியம் (Jizzakh Region, உசுபேகிய மொழி : Jizzax viloyati, Жиззах вилояти, جىززﻩخ ۋىلايەتى) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையத்தில் / கிழக்கில் அமைந்துள்ளது. இது தெற்கிலும் தென்கிழக்கு தஜிகிஸ்தானுடனும், மேற்கில் சமர்கண்ட் பிராந்தியத்துடனும், வடமேற்கில் நவோய் பிராந்தியத்துடனும், வடக்கே கஜகஸ்தானுடனும், கிழக்கில் சிர்தாரியோ பிராந்தியத்துடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த பிராந்தியமானது 20,500 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 910,500 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 80% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[ மேற்கோள் தேவை ] இந்த பிராந்தியத்தின் தலைநகராக ஜிசாக் நகரம் (பாப் 127,500 மக்கள்) உள்ளது. மற்ற முக்கிய நகரங்களாக டஸ்ட்லிக், ககரின், கல்யரால் (கல்லாரோல்), பக்தகோர் மற்றும் மார்ட்ஜான்புலாக் ஆகியவை உள்ளன. ஜிசாக் பிராந்தியம் முன்னர் சிர்தாரியோ பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் 1973 இல் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தின் காலநிலை என்பது பொதுவாக கண்டம் சார்ந்த காலநிலையாகும். இதில் லேசான குளிர்காலம் மற்றும் வெப்பமான, வறண்ட கோடைகாலம் கொண்டதாக உள்ளது. ஜிசாக் பிராந்தியத்தின் பொருளாதாரம் முதன்மையாக வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு பருத்தி மற்றும் கோதுமை முக்கியமாக விளைவிக்கப்படுகின்றன. இதற்கு இங்குள்ள விரிவான நீர்ப்பாசன வசதி பயன்படுத்தப்படுகிறது. இங்கு உள்ள இயற்கை வளங்களில் ஈயம், துத்தநாகம், இரும்பு மற்றும் சுண்ணக்கல் ஆகியவை அடங்கும். பிராந்தியத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ உஸ்பெகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்படுகின்றன. இந்த உயர் தொழில்நுட்ப தொழில்துறை பூங்கா மார்ச் 2013 க்குள் முறையாக நிறுவப்படும். இந்த பிராந்தியத்தில் கட்டுமானம், வேளாண் தொழில்துறை மற்றும் இயந்திர பொறியியல் துறைகளில் பல கூட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்க சீன மேம்பாட்டு வங்கி 50 மில்லியன் டாலர் கடனை வழங்குகிறது.[1] இப்பகுதியில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளது, இதில் 2500 கி.மீ.க்கும் மேற்பட்டவை சாலைகள் உள்ளன துர்கெஸ்தான் மலைத்தொடரின் மேற்கு சரிவுகளில் உள்ள ஜாமின் தேசிய பூங்காவும் அதன் தனித்துவமான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கு பெயர் பெற்றது. இந்த மலைத்தொடரில் ஏராளமான காட்டுயிர்கள் உள்ளன; வசந்த காலம் மற்றும் கோடைக் காலத்தில், அல்பைன் தூந்திரம் பல வண்ணங்களைக் கொண்டதாக உள்ளது: பிரகாசமான-சிவப்பு துலிப் மற்றும் பனி-வெள்ளை அகாசியா பூக்கள் போன்றவை பூக்கின்றன. இலையுதிர் காலத்தில் மலைகளில் உள்ள ஹேசல்நட் மரங்களானது தங்க நிற குவிமாடங்கள் போல அழகாக அலங்கரமாக காணப்படுகின்றன. நெடுவரிசையில் உள்ள பிர்ச் மரங்கள் உயர்ந்து நிற்கிறன்றன. உயர்ந்த மலைப்பகுதிகளின் மேற் பகுதியியல் உள்ள கரலாஷ்சே மலை இடுக்குகளில், கரும் நாரைகள் கூடு கட்டுகின்றன. இந்த அரிய பறவைகள் உஸ்பெகிஸ்தானின் பெருமையும் சிறப்பும் ஆகும். அவை ஆருகிய உயிரினமாக பல நாடுகளில் உள்ள "செம்பட்டியலில்" குறிப்படப்பட்டுள்ளன. வசந்த காலத்தின் ஆரம்பத்தில் உருவாகும் அமேசே காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின்போது பெய்யும் மழையின்போது இங்கு வெள்ள நீர் நிறையும்போது , வாத்துகள், காட்டு வாத்துகள், கூழைக்கடாக்கள் மற்றும் சாம்பல் நாரைகள் ஆகியவற்றின் கூட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த பிரதேசமானது சூறைக்குருவி, கீச்சான், மற்றும் உள்ளான் போன்றவை கூடுகட்டும் இடமாக விளங்குகிறது. மாவட்டங்கள்![]() இப்பகுதி 12 மாவட்டங்களாக (டுமன்கள்) பிரிக்கப்பட்டுள்ளது:
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia