ஜீவகராம விகாரைஜீவகராம விகாரை (இந்தி: जीवकर्म विहार; ஆங்கிலம்: Jivakarama vihara), மேலும் ஜீவக அமரவண விஹாரா (அம்ர - வன என்றால் "மாம்பழ தோட்டம்"), [1] ஜீவகம்ரவண, ஜீவகம்ரபனா அல்லது ஜீவகவனராமம், என்பது புத்தர் காலத்தில் அரச மருத்துவருமான சீவகன் என்பவரால் நிறுவப்பட்ட ஒரு பண்டைய புத்த மடாலயம் அல்லது விகாரை ஆகும். [2] [3] [4] இந்தியவின் பீகார் மாநிலத்தில், நாளந்தா மாவட்டத்தில், உள்ள ராஜகிருஹத்தின் வெளிப்புறத்தில், கிஜ்ஜகுடா மலைக்குக் கீழே, ஒரு மாம்பழத்தோட்டம் இருந்தது. இது மன்னர் பிம்பிசாரரிடம் அரச மருத்துவரான ஜீவகன்என்பவரால் பௌத்த சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.[2] ஜீவகர் அந்த இடத்தில் ஒரு மடத்தை கட்டி, அதனை சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். [5] புத்தர், தேவதத்தனால் காயமுற்ற போது இந்த மடாலயத்தில் ஒருமுறை சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.[2][6] ![]() சங்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, தொடக்கத்தில் இந்த மடாலயம், தனியறைகள் (ஆங்கிலம்: Cells) இல்லாமல், இரண்டு நீண்ட, இணையான நீள்சதுர மண்டபங்களுடனும், துறவிகள் உண்ணவும் உறங்கவும் பல படுக்கைகளுடன் கூடிய துயில்கூடம் (ஆங்கிலம்: Dormitories) ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டது.[2] மற்ற கூடங்கள் (ஆங்கிலம்: Hall) பின்னர் கட்டப்பட்டன. பெரும்பாலும் நீளமான, நீள்சதுர கட்டிடங்கள், பராபர் குகைகளின் நீளமான கட்டுமானத்தை நினைவூட்டுகின்றன.[2] [7] இந்த விகாரைக்கான தொடக்ககால கட்டுமானம் அனேகமாக கி.மு. 530-400 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகலாம் என்று தொல்பொருள் சான்றுகள் சுட்டுகின்றன.[2][3] ஒன்றாம் நூற்றாண்டில் காந்தாராவில் கட்டப்பட்ட பிற்கால நாற்கர விகாரையைவிட இந்த விகாரை மிகவும் வித்தியாசமானது. [2] பிற்காலத்தில் தூபிகளைக் கொண்டு கட்டப்பட்ட விகாரைகளுக்கு மாறாக, தூபி இல்லாதது இங்கு நோக்கத்தக்கது. [2] கட்டுமான முறை (இடிந்த அடித்தளம்) மற்றும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், இரும்பு ஆணிகள், சுட்டகளிமண் (ஆங்கிலம்: Terracota) பந்துகள் அல்லது கரடுமுரடான சிவப்பு மட்பாண்டங்கள் போன்றவை அனைத்தும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. [2] காட்சியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia