நாலந்தா மாவட்டம்
நாலந்தா மாவட்டம் (Nalanda district) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் முப்பத்தி எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் பிகார் செரீப் நகரத்தில் இயங்குகிறது. இம்மாவட்டம் பாட்னா கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பௌத்தர்களின் ராச்கிர் மலை உள்ளது. மாவட்டச் சிறப்புகள்
புவியியல்பிகார் மாநிலத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டம் 2355 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பாலகு, கும்பாரி, மோகனா மற்றும் ஜிராயன் ஆறுகள் பாய்கிறது. மக்கள் தொகையியல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 2,872,523 ஆக உள்ளது.[1] 2355 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி 1,220 inhabitants per square kilometre (3,200/sq mi) ஆக உள்ளது.[1] மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) 21.18 % ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 921 வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.41 % ஆக உள்ளது.[1] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர் மற்றும் மக்கள் தொகை இசுலாமிய சமய மக்கள் தொகை கூடுதலாகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் மிகக்குறைவாகவும் உள்ளது. மொழிகள்பிகார் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. பொருளாதாரம்பீரங்கி குண்டுகள் தயாரிக்கும் இந்திய அரசின் இராணுவ தளவாட தொழிற்சாலை நாலந்தாவில் அமைந்துள்ளது.[2][3] இந்தியாவில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக, நாலந்தா மாவட்டத்தை 2006-இல் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.[4] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் பிகார் செரீப், ராஜகிரகம் மற்றும் ஹில்சா என மூன்று வருவாய் உட்கோட்டங்களைக் கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்காக இம்மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் இயங்குகிறது. அரசியல்இம்மாவட்டம் பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி , ராஜ்கீர் சட்டமன்றத் தொகுதி, நாலந்தா சட்டமன்ற தொகுதிகளையும்; நாலந்தா மக்களவைத் தொகுதியும் கொண்டது. போக்குவரத்துஇம்மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 30, 31, 82 மற்றும் 110 என நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் இம்மாவட்டத்தின் வழியாக செல்வதால், மாநிலத்தின் மற்றும் அருகில் அமைந்த மாநிலங்களுடன் தரை வழியாக நன்கு இணைந்துள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia