ஜெகத் மாணிக்கியா
ஜெகத் மாணிக்கியா (Jagat Manikya) (ஆட்சிக்கு முந்தைய பெயர் ஜோகோத்ராய்) 1732 முதல் அதுவரை திரிபுரா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த ரோஷ்னாபாத்தின் வங்காள ஆதரவு ஆட்சியாளராக இருந்தார். அந்த ஆண்டில் ஜோகோத்ராய் தனது உறவினரான இரண்டாம் தர்ம மாணிக்கியாவிற்கு பதிலாக ஆட்சியாளராக விரும்பினார். இவர் வங்காளத்திற்குச் சென்று, வங்காளத்தின் நவாப் ஷுஜா-உத்-தின் முகம்மது கானின் உதவியுடன் உதய்ப்பூர் மீதான தாக்குதலைத் தொடர்ந்ந்தார். போரில், தர்ம மாணிக்கியாவின் படைகளின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். தர்ம மாணிக்கியாவும் அவரது ஆதரவாளர்களும் திரிபுராவின் மலைப் பகுதிகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். ஜோகோத்ராய் பின்னர் ஜெகத் மாணிக்கியா என்ற ஆட்சிப் பெயரை ஏற்றுக்கொண்டார். மேலும் நவீன சில்ஹெட் மற்றும் மைமன்சிங்கின் பெரும்பகுதியை வங்காள நவாப்பின் அடிமையாக ரோஷ்னாபாத்திலிருந்து ஆட்சி செய்தார். சான்றுகள்
ஆதாரங்கள்
இதனையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia