மாணிக்ய வம்சம்![]() ![]() ![]() மாணிக்கிய வம்சம் ( Manikya dynasty ) என்பது துவிப்ரா இராச்சியத்தின் ஆளும் வீடாக இருந்தது. பின்னர் சுதேச திரிபுரா இராச்சியமாகவும், தற்போது இந்திய மாநிலமான திரிபுராவாகவும் ஆனது. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, வம்சம் அதன் உச்சத்தில் இந்திய துணைக் கண்டத்தின் வடகிழக்கில் ஒரு பெரிய பகுதியைக் கட்டுப்படுத்தியது. பிரித்தானிய பேரரசின் செல்வாக்கின் கீழ் வந்த பிறகு, வங்காளதேசத்தில் உள்ள "கொமில்லா" மற்றும் "சிட்டகாங் மலைப்பாதைகள்" இராச்சியத்தின் சில பகுதிகளை இழந்தது. 1761 ஆம் ஆண்டில், நிலப்பிரபுத்துவவாதிகளாக இருந்த இவர்கள் ஒரு சுதேச அரச ஆட்சியாளர்களாக மாறினார்கள். இருப்பினும் மாணிக்கியர்கள் 1949 வரை இப்பகுதியின் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். பின்னர், இது இந்தியாவுடன் இணைந்தது. வரலாறுதிரிபுராவின் அரசர்களின் சரித்திரமான ராஜ்மாலா சந்திர குலத்திலிருந்து ஒரு வம்சாவளியைக் கண்டுபிடித்தது. வங்காள சுல்தானால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகு முதல் மாணிக்கிய அரசர் என்று கூறப்படும் இரத்னா பா என்ற மன்னனின் ஏற்றம் வரை திரிபுராவின் 185 மன்னர்களின் உடைக்கப்படாத வரிசையாகும். [1] இருப்பினும், ஆரம்ப மாணிக்கிய ஆட்சியாளர்களின் வம்சாவளி மற்றும் காலவரிசையில் ராஜ்மாலா தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக இப்போது நம்பப்படுகிறது. [2] முதல் வரலாற்று மாணிக்கியா உண்மையில் மகா மாணிக்கியா, [3] 1400 களின் முற்பகுதியில் அண்டை பழங்குடியினர் மீது ஆதிக்கம் செலுத்திய பின்னர் இராச்சியத்தை நிறுவிய திரிபுரி தலைவரானார் என்று நாணயவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. [4] இந்த மன்னர் பின்னர் "மாணிக்கியா" என்ற பட்டத்தை வங்காளத்தின் மீதான வரலாற்று வெற்றியின் நினைவாகப் பெற்றார். அவருடைய சந்ததியினரால் இந்தப் பெயர் தொடரப்பட்டது.[5] இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானியர்களின் ஆட்சியின் போது, மாணிக்கிய மன்னர், கொமில்லா மற்றும் சிட்டகாங் மலைப் பகுதிகள் போன்ற சில பகுதிகளை ஆங்கிலேயர்களிடம் இழந்தார். அவை அவர்கள் வெளியேறிய பிறகு மீண்டும் பெறப்படவில்லை. இராணுவ வெற்றிமகா மாணிக்கியாவின் ஆரம்பகால வாரிசுகள் கணிசமான இராணுவ வெற்றியை அடைந்தனர். வங்காளம், அசாம் மற்றும் மியான்மரின் நிலப்பகுதிகளை கைப்பற்றினர். திரிபுரா 16 ஆம் நூற்றாண்டில் தான்ய மாணிக்கியா மற்றும் இரண்டாம் விசய மாணிக்கியா போன்ற முக்கிய மன்னர்களின் கீழ் அதன் உச்சத்தை அடைந்தது. [6] அதன் நிலங்கள் வடக்கே காரோ மலைகள் முதல் தெற்கே வங்காள விரிகுடா வரை நீண்டிருந்தது. ஒரு இந்து இராச்சியத்தின் மன்னர்களாக, மாணிக்கியர்கள் வங்காளத்தின் தொடர்ச்சியான முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் ஒரு போட்டியை வளர்த்துக் கொண்டனர். 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு முன்பு சுல்தான்கள், ஆளுநர்கள் மற்றும் நவாப்களுடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர். முகலாய சக்தி குறைந்து போனதால், வங்காளத்துடனான விரோதம் மீண்டும் வெடித்தது. இது மாணிக்கியர்களை உதவிக்காக முதலில் ஆங்கிலேயர்களை அணுகத் தூண்டியது. 1761 ஆம் ஆண்டில், திரிபுரா பிரித்தானிய செல்வாக்கிற்கு அடிபணிந்து, சுதேசப் பாதுகாவலராக மாறியது. இருப்பினும் இப்பகுதியின் கட்டுப்பாடு மாணிக்கிய வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது. [7] 1870 ஆம் ஆண்டில், வீர் சந்திர மாணிக்கியா அரியணையில் ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியான அரசியல் சீர்திருத்தங்களைத் தொடங்கினார். அவரது அரசாங்கத்தை பிரித்தானிய அமைப்பில் மாதிரியாகக் கொண்டார். வங்காளத்தின் கலாச்சாரத்தை தனது ஆட்சியின் கீழ் அரசவையில் ஏற்றுக்கொண்டார். மேலும், அவர் புகழ்பெற்ற கவிஞர் இரவீந்திரநாத் தாகூருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தில் திரிபுரா சிலகாலம் இணைக்கப்பட்ட பிறகு, கடைசி மாணிக்ய மன்னரான மகாராஜா வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் 1947 இல் இந்திய ஒன்றியத்தின் கீழ் இணையத் தேர்வு செய்தார். நவீன இந்திய தேசத்தில் திரிபுராவின் இறுதி ஏற்றம் இவரது விதவையான காஞ்சன் பிரவா தேவியால் கையெழுத்திடப்பட்டது. அவருக்குப் பதிலாக சிறுவயது கிரிட் விக்ரம் கிசோர், ஐந்து நூற்றாண்டுகளின் மாணிக்கியா ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். [7] ஆட்சியாளர்களின் பட்டியல்
சான்றுகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia