ஜேம்ஸ் நீஷம்
ஜிம்மி நீஷம் (Jimmy Neesham) என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் டக்ளஸ் ஷீஹான் நீஷம் (பிறப்பு: செப்டம்பர் 17, 1990) நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறார். ஆக்லாந்தில் பிறந்த இவர் வெலிங்டன் துடுப்பாட்ட அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடுகிறார் . பன்னாட்டுப் போட்டிகள்இந்தியாவுக்கு எதிராக நீஷம் தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடி ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்கள் எடுத்தார், இது அறிமுகப் போட்டியில் 8வதாக களமிறங்கிய தேர்வு மட்டையாளர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[1] ஜூன் 2014 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இரண்டாவது தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தனது முதல் இரண்டு போட்டிகளில் நூறு அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[2] 3 ஜனவரி 2019 அன்று, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நீஷம் ஒரு ஓவரில் ஐந்து ஆறுகள் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்தார்.[3] இது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மட்டையாளர் ஒருவர் ஒரு நிறைவில் எடுத்த அதிக ஓட்டங்களாகும்.[4] ஏப்ரல் 2019 இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றார்.[5][6] 1 ஜூன் 2019 அன்று, உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் முதல் போட்டியில், நீஷம் தனது 50 வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[7] ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் போட்டியில், நீஷம் தனது ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தியதுடன் 50வது முறையாக மட்டையாளரை வீழ்த்தினார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia