ஜோரம் மக்கள் இயக்கம்
ஜோரம் மக்கள் இயக்கம் (Zoram People's Movement) வடகிழக்கு இந்தியாவில் உள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி அல்லாத 7 அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணியில் ஜோரம் தேசியவாத கட்சி, ஜோரம் அதிகாரப் பரவலாக்கக் கட்சி, ஜோரம் மறுமலர்ச்சி முன்னணி, மிசோரம் மக்கள் கட்சி, மிசோரம் மக்கள் மாநாடு கட்சி போன்ற எழு மாநிலக் கட்சிகள் இருந்தது. இக்கட்சிகள் ஒன்றிணைந்து ஜோரம் மக்கள் இயக்கம் எனும் பெயரில் இயங்கியது. 2018 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 8 தொகுதிகளை வென்றது.[1]2019-ஆம் ஆண்டில் மிசோரம் மக்கள் மாநாடு கட்சி இந்த இயக்கத்திலிருந்து விலகியது.[2] எனவே ஜோரம் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியானது. ஆட்சி அமைத்தல்2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், இக்கட்சி 27 தொகுதிகளைக் கைப்பற்றி லால்துஹோமா தலைமையில் ஆட்சி அமைத்தது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia